LATEST NEWS
அய்யயோ.. ஓடும் பிக்-அப் டிரக்கில் தொங்கிய 2 சிறுவர்கள்.. டயருக்கு அடியில் சிக்கிய சிறுவனுக்கு நேர்ந்த கொடூரம்.. இணையத்தை உலுக்கும் வீடியோ..!!
சமூக வலைதளங்களில் தீயாய் பரவி வரும் அதிர்ச்சியூட்டும் வீடியோ ஒன்றில், ஓடிக்கொண்டிருக்கும் ஒரு பிக்-அப் டிரக்கின் பின்புறத்தில் இரண்டு சிறுவர்கள் தொங்கிக்கொண்டு ஆபத்தான முறையில் பயணம் செய்வது பதிவாகியுள்ளது. எதிர்பாராதவிதமாக அந்த டிரக் திடீரென பின்னோக்கி நகர்ந்தபோது, நிலைதடுமாறியதில் ஒரு சிறுவன் டயருக்கு அடியில் சிக்கி கொடூரமான முறையில் நசுக்கப்பட்டுள்ளான். இந்த விபத்தில் அச்சிறுவனுக்குப் பலத்த காயங்கள் ஏற்பட்டதாகத் தகவல்கள் வெளியான நிலையில், சிகிச்சை பலனின்றி அவன் பரிதாபமாக உயிரிழந்துள்ளான்.
” நில்லுங்கள், மீண்டும் வாருங்கள்” என்ற வாசகத்துடன் பரவி வரும் இந்த நெஞ்சைப் பதறவைக்கும் விபத்துச் சம்பவம், இணையத்தில் பெரும் சோகத்தையும் கவலையையும் ஏற்படுத்தியுள்ளது. சிறுவர்களின் இந்த ஆபத்தான விளையாட்டுக்குக் காரணமானவர்கள் யார் என்பது குறித்தும், டிரக் ஓட்டுநரின் அலட்சியம் குறித்தும் முழுமையான விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று அரசு மற்றும் பாதுகாப்புத் துறை அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர்.
