CRIME
வட்டிப் பணத்திற்காக நடந்த கொடுமை… “கண்ணில் மிளகாய்ப்பொடி தூவி” வீட்டுக்குள் இழுத்துச்சென்று முதியவருக்கு நேர்ந்த கொடூரம்…!!
பஞ்சாப் மாநிலம் பாஜில்கா மாவட்டத்தில் வட்டிப் பணத் தகராறு காரணமாக முதியவர் ஒருவர் மிகக் கொடூரமாகத் தாக்கப்பட்டு உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சாலையில் நடந்து சென்று கொண்டிருந்த ஹன்சா சிங் என்ற முதியவரை, சில கடன்கார அடியாட்கள் வலுக்கட்டாயமாக ஒரு வீட்டிற்குள் இழுத்துச் சென்றுள்ளனர்.
வீட்டிற்குள் கொண்டு செல்லப்பட்ட அவரைத் தப்பியோட முடியாதவாறு கயிறுகளால் கட்டிப்போட்டு, மிகக் கொடூரமான முறையில் சரமாரியாகத் தாக்கியுள்ளனர். அதுமட்டுமின்றி, அவரது அலறலையும் பொருட்படுத்தாமல், அடியாட்கள் அவரது கண்களில் காரமான மிளகாய்ப் பொடியைத் தூவி சித்திரவதை செய்துள்ளனர்.
காயங்களுடன் மீட்கப்பட்ட ஹன்சா சிங் உடனடியாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுத் தீவிர சிகிச்சை பெற்று வந்தார். இருப்பினும், சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக உயிரிழந்தார். இந்த மனிதநேயமற்ற கொடூரச் சம்பவம் தொடர்பாகப் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
