அடக்கொடுமையே… என்ன மனுஷனுங்கடா இவனுங்க.. சாப்பிட்ட பில்ல கேட்ட ஓனரை கதற கதற அடிச்ச 20 பேர் கொண்ட கும்பல்..! ஹோட்டலில் நடந்த பகீர் சம்பவம்..!! – cinefeeds
Connect with us

CRIME

அடக்கொடுமையே… என்ன மனுஷனுங்கடா இவனுங்க.. சாப்பிட்ட பில்ல கேட்ட ஓனரை கதற கதற அடிச்ச 20 பேர் கொண்ட கும்பல்..! ஹோட்டலில் நடந்த பகீர் சம்பவம்..!!

Published

on

பீகார் மாநிலம் தரபங்கா நகர் காவல் எல்லைக்குட்பட்ட பகுதியில் உள்ள சர்வே அலுவலக வளாகத்தில் அமைந்துள்ள உணவகத்தில் இந்த அதிர்ச்சி சம்பவம் நடந்துள்ளது. உணவக உரிமையாளர் சுமித் குமார் ஜா என்பவரிடம், முதன்மை குற்றவாளியான தீபக் ஜா தனது 8 நண்பர்களுடன் சில நாட்களுக்கு முன்பு வந்து உணவு சாப்பிட்டுள்ளார். அப்போது ரூ.3,180 கட்டணம் ஆன நிலையில், பணம் இல்லை என்றும் ஓரிரு நாளில் தருவதாகவும் கூறிச் சென்றுள்ளனர். பின்னர் சுமித் தொலைபேசியில் கேட்டபோது, வங்கிக் கணக்கு எண் கேட்டுப் பணம் அனுப்பாமல் ஏமாற்றியும், மீண்டும் தொடர்பு கொண்டபோது அப்புறம் வந்து தருகிறேன் என அலட்சியமாகவும் பதிலளித்துள்ளார்.

இந்நிலையில், புதன்கிழமை மாலையில் குற்றவாளி தீபக் ஜா சுமார் 20 இளைஞர்களுடன் கையில் இரும்பு கம்பிகள், பிளாஸ்டிக் குழாய்கள், தடிகள் மற்றும் கூர்மையான கத்திகளுடன் உணவகத்திற்குள் திடீரென புகுந்துள்ளார். உள்ளே புகுந்ததும் அங்கிருந்த பொருட்களை அடித்து நொறுக்கி ரகளையில் ஈடுபட்டுள்ளனர். உணவக உரிமையாளர் சுமித் அவர்களைத் தடுக்க முயன்றபோது, அனைவரும் சேர்ந்து நாற்காலிகள், தடிகள் மற்றும் இரும்பு கம்பிகளால் அவர் மீது கொடூரத் தாக்குதல் நடத்தியுள்ளனர். இதில் தலையில் பலத்த காயம் அடைந்த சுமித், இரத்த வெள்ளத்தில் மயங்கி விழுந்தார்.

Advertisement

தாக்குதலின் போது தடுக்க வந்த உணவகப் பெண் ஊழியர்களிடமும் அந்த கும்பல் தள்ளிவிட்டு தகாத முறையில் நடந்து கொண்டுள்ளது. பலத்த காயமடைந்த சுமித் குமார் ஜா உடனடியாக தரபங்கா மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, தலையில் பல தையல்களுடன் சிகிச்சை பெற்று வருகிறார். இந்த பயங்கர சம்பவம் முழுவதும் உணவகத்தில் இருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது. தகவலறிந்து வந்த நகர் காவல் நிலைய போலீசார், சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் குற்றவாளிகளை அடையாளம் காணும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். சுமித்தின் வாக்குமூலத்தின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்யப்பட்டு அடுத்தகட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in