நடுவானில் சாதித்த இந்திய விமானி… 180 பேரின் உயிரைக் காப்பாற்றிய நிஜ ஹீரோ! விஷிஷ்ட குஜராத் கரிமா’ விருது அறிவித்து முதல்வர் கெளரவம்..!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

நடுவானில் சாதித்த இந்திய விமானி… 180 பேரின் உயிரைக் காப்பாற்றிய நிஜ ஹீரோ! விஷிஷ்ட குஜராத் கரிமா’ விருது அறிவித்து முதல்வர் கெளரவம்..!!

Published

on

‘ஃப்ளை துபாய்’ விமான சம்பவத்தின்போது துணிச்சலுடன் செயல்பட்டு 180 பயணிகளின் உயிரைக் காப்பாற்றிய இந்திய விமானி ஸ்மித் மச்சருக்கு, குஜராத் அரசு உயரிய விருது வழங்கி கௌரவிக்க உள்ளதாக அறிவித்துள்ளது. ஆபத்தான சூழ்நிலையிலும் மனவுறுதியுடன் போராடிப் பல உயிர்களைக் மீட்ட அவரது வீரத்தையும் திறமையையும் பாராட்டி, மாநிலத்தின் மிக உயரிய விருதான ‘விஷிஷ்ட குஜராத் கரிமா’ விருது வழங்கப்படும் என குஜராத் முதல்வர் பூபேந்திர படேல் தெரிவித்துள்ளார்.

விமானி ஸ்மித் மச்சர் மகாராஷ்டிர மாநிலம் மும்பையில் பிறந்து வளர்ந்தவர் என்ற போதிலும், அவரது பெற்றோர் குஜராத் மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. அவரது இந்தச் சாதனை மற்றும் துணிச்சலான செயலுக்குப் பாராட்டுக்கள் குவிந்து வரும் நிலையில், குஜராத் அரசு அறிவித்துள்ள இந்த விருது அவருக்கு வழங்கப்பட்டுள்ள மாபெரும் கௌரவமாகக் கருதப்படுகிறது.

Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in