அய்யோ கொடுமையே… சமோசா லேட்டானதற்கு இப்படியா பண்றது..?! ஆட்களைத் திரட்டி வந்து கடைக்காரரை அலறவிட்டு அடிச்ச கும்பல்… பதறவைக்கும் CCTV வீடியோ..!! – cinefeeds
Connect with us

CRIME

அய்யோ கொடுமையே… சமோசா லேட்டானதற்கு இப்படியா பண்றது..?! ஆட்களைத் திரட்டி வந்து கடைக்காரரை அலறவிட்டு அடிச்ச கும்பல்… பதறவைக்கும் CCTV வீடியோ..!!

Published

on

ஹரியானா மாநிலம் ரேவாரி மாவட்டத்தில், நார்னூல் தேசிய நெடுஞ்சாலை-11 இல் அமைந்துள்ள குண்ட் சவுக்கி அருகே ‘நியூ பிகானேரி உணவகம்’ இயங்கி வருகிறது. இதனை குருகிராம் மாவட்டம் தல்பூர் கிராமத்தைச் சேர்ந்த ஜதின் (28) என்பவர் நடத்தி வருகிறார். செப்டம்பர் 6 ஆம் தேதி மாலை 5 மணியளவில், வாடிக்கையாளர் ஒருவர் சமோசா வாங்க அங்கு வந்துள்ளார். அந்த சமயத்தில் கடையில் அதிக கூட்டம் இருந்ததால், சமோசா தயாராக சிறிது நேரம் ஆகும் என்றும், தங்களிடம் ஹோம் டெலிவரி வசதி இல்லை என்றும் ஜதினின் தம்பி அமன் தெரிவித்துள்ளார். இதைக் கேட்டு ஆத்திரமடைந்த அந்த வாடிக்கையாளர், அங்கு ஊழியர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டுவிட்டு அங்கிருந்து புறப்பட்டுச் சென்றார்.

அதன்பின்னர், அன்று இரவு சுமார் 8 மணியளவில், அந்த நபர் தனது கூட்டாளிகள் பலரை அழைத்துக்கொண்டு மீண்டும் உணவகத்திற்கு வந்துள்ளார். வந்தவுடனேயே அமனிடம் தகாத வார்த்தைகளால் பேசி தாக்குதல் நடத்தத் தொடங்கியுள்ளனர். தடுக்க வந்த ஊழியர்களையும், பின்னர் அங்கு வந்த உணவக உரிமையாளர் ஜதினையும் அவர்கள் கொடூரமாகத் தாக்கினர். இந்த வன்முறை மோதலில் ஜதின் மற்றும் அவரது தம்பி அமன் ஆகிய இருவருக்கும் பலத்த காயம் ஏற்பட்டது. உடனடியாக அவர்கள் மீட்கப்பட்டு ரேவாரியில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர்.

Advertisement

தாக்குதலுக்குப் பிறகு, அடியாட்கள் உணவகத்தின் கவுண்டர் மற்றும் அங்குள்ள பொருட்களை அடித்து நொறுக்கி சேதப்படுத்திவிட்டு தப்பிச் சென்றனர். இந்த முழுத் தாக்குதல் மற்றும் அடிதடிச் சம்பவமும் உணவகத்தில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராக்களில் தெளிவாகப் பதிவாகியுள்ளது. இச்சம்பவம் குறித்து உணவக உரிமையாளர் காவல்நிலையத்தில் புகார் அளித்தும், பல நாட்கள் ஆகியும் காவல்துறை இன்னும் வழக்குப் பதிவு செய்யவில்லை என்றும், குற்றவாளிகளைக் கைது செய்யவில்லை என்றும் குற்றம் சாட்டப்பட்டுள்ளது. சிசிடிவி காட்சி ஆதாரங்களின் அடிப்படையில் தாக்குதல் நடத்தியவர்களை உடனடியாகக் கைது செய்ய வேண்டும் எனப் பாதிக்கப்பட்டவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in