அடேங்கப்பா… 6 வயசுல யோகா டீச்சரா…? கின்னஸ் புத்தகத்தையே மிரள வைத்த குட்டி தேவதை..!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

அடேங்கப்பா… 6 வயசுல யோகா டீச்சரா…? கின்னஸ் புத்தகத்தையே மிரள வைத்த குட்டி தேவதை..!!

Published

on

அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணம் ஹூஸ்டனைச் சேர்ந்தவர் பீனிக்ஸ் கிசெல் ஹிக்ஸ். அவருக்கு தற்போது வெறும் 6 வயது மட்டுமே ஆகிறது. ஆனால் ஓராண்டுக்கு முன்னதாகவே, அதாவது தனது 5 வயதில், சரியாக 5 ஆண்டுகள் மற்றும் 337 நாட்களில் அவர் ஒரு மகத்தான உலக சாதனையைப் படைத்திருந்தார்.

இந்த வயதிலேயே சர்வதேச அளவில் அங்கீகரிக்கப்பட்ட 200 மணிநேர யோகா ஆசிரியர் பயிற்சிப் பாடங்களை வெற்றிகரமாக முடித்து சான்றிதழ் பெற்றார். இதன் மூலம் உலகின் மிக இளைய அங்கீகரிக்கப்பட்ட யோகா ஆசிரியை என்ற சாதனையைப் படைத்தார். இச்சாதனையை கின்னஸ் உலக சாதனை அமைப்பு அதிகாரப்பூர்வமாக அங்கீகரித்துள்ளது.

Advertisement

கின்னஸ் உலக சாதனை புத்தகத்தில் அவரது பெயர் வெளியான போது பேசிய அவர், “நான் புதிய விஷயங்களை முயற்சிப்பதையும், கற்றுக்கொள்ளும் போதே மகிழ்ச்சியாக இருப்பதையும் விரும்புகிறேன். உலகெங்கிலும் உள்ள குழந்தைகள் தங்களின் வயது என்னவாக இருந்தாலும், தங்களது கனவுகளைப் பின்தொடர தூண்டுகோலாக இருப்பதில் பெருமகிழ்ச்சி அடைகிறேன்” என்று தெரிவித்தார். இதற்கு முன்பு இந்தியாவின் பிரான்வி குப்தா தனது 7 வயதில் படைத்திருந்த சாதனையை, இந்த ஹூஸ்டன் சிறுமி முறியடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in