“அம்மா.. காப்பாத்துங்க..!” விடிய விடிய ஆழ்துளைக் கிணற்றுக்குள் தவித்த 3 வயது குழந்தை.. கதறிய பெற்றோர்! மீட்புப் பணியில் நடந்தது என்ன..? நெஞ்சை உலுக்கும் பின்னணி..!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

“அம்மா.. காப்பாத்துங்க..!” விடிய விடிய ஆழ்துளைக் கிணற்றுக்குள் தவித்த 3 வயது குழந்தை.. கதறிய பெற்றோர்! மீட்புப் பணியில் நடந்தது என்ன..? நெஞ்சை உலுக்கும் பின்னணி..!!

Published

on

ஹரியானா மாநிலம் ஃபரிதாபாத்தின் சேஹி கிராமத்தில், விளையாடிக் கொண்டிருந்த நேகா 3 என்ற 3 வயது சிறுமி கைவிடப்பட்ட ஆழ்துளைக் கிணற்றில் விழுந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. கடந்த செப்டம்பர் 27 மாலை நேரத்தில் இந்த விபத்து நிகழ்ந்துள்ளது. தங்களது குழந்தை ஆழ்துளைக் கிணற்றுக்குள் விழுந்ததை அறிந்து பெற்றோர் கதறி அழுத நிலையில், தேசிய பேரிடர் மீட்புப் படை மற்றும் உள்ளூர் போலீசார் இணைந்து உடனடியாக மீட்புப் பணியில் குதித்தனர். விடிய விடிய நடத்தப்பட்ட தீவிரப் போராட்டத்திற்குப் பிறகு, அதிகாலை 3:50 மணியளவில் அந்தச் சிறுமி பத்திரமாக மீட்கப்பட்டு, உடனடி மருத்துவ சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டாள்.

இந்தக் குடும்பத்தினர் உத்திரப் பிரதேச மாநிலம் மைன்புரி பகுதியைச் சேர்ந்தவர்கள் என்றும், பிழைப்புத் தேடி இங்கு வந்து தங்கியிருந்ததும் தெரியவந்துள்ளது. அதிர்ஷ்டவசமாக இந்தச் சம்பவத்தில் சிறுமி உயிருடன் மீட்கப்பட்டாலும், ஆழ்துளைக் கிணறுகளை மூடாமல் கைவிடுபவர்களின் அலட்சியம் பெரும் கவலையை ஏற்படுத்துகிறது. மேலும், சிறு குழந்தைகளை ஒருபோதும் தனியாக விளையாட விடக் கூடாது என்றும், பெற்றோர்கள் எப்போதும் விழிப்புடன் கண்காணிக்க வேண்டும் என்றும் அதிகாரிகள் எச்சரிக்கின்றனர்.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in