“உடம்பெல்லாம் அழுகிடுச்சு” அறை எண் 502-ல் சடலமாக தொங்கிய PG மருத்துவ மாணவி… ரூமுக்கு வந்து தங்கியிருந்த காதலன்..? அடுத்தடுத்த அதிர்ச்சி..!! – cinefeeds
Connect with us

CRIME

“உடம்பெல்லாம் அழுகிடுச்சு” அறை எண் 502-ல் சடலமாக தொங்கிய PG மருத்துவ மாணவி… ரூமுக்கு வந்து தங்கியிருந்த காதலன்..? அடுத்தடுத்த அதிர்ச்சி..!!

Published

on

ஹைதராபாத் மியாப்பூரில் உள்ள ஒரு விடுதியில் இளம்பெண் ஒருவர் மர்மமான முறையில் உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. உயிரிழந்த பெண் சங்காரெட்டி மாவட்டத்தைச் சேர்ந்த 27 வயது கோமதி சுஜானா என அடையாளம் காணப்பட்டுள்ளார். இவர் ஹனுமகோண்டாவில் முதலாமாண்டு குழந்தை மருத்துவ முதுகலை (Pediatrics PG) படித்து வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

கடந்த செப்டம்பர் 30ஆம் தேதி ஹைதராபாத் வந்தடைந்த சுஜானா, திடீரென காணாமல் போனார். இதனால் பதற்றமடைந்த அவரது தந்தை காவல்துறையில் புகார் அளித்தார். புகாரின் பேரில், சுஜானாவின் அலைபேசி சிக்னல் இருப்பிடத்தை வைத்து அவர் மியாப்பூரில் உள்ள ஒரு விடுதியில் இருப்பதை போலீஸார் கண்டறிந்தனர்.

Advertisement

உடனடியாக போலீஸார் அந்த விடுதிக்குச் சென்று சோதனையிட்டபோது, அங்குள்ள அறை எண் 502-ல் சுஜானா சடலமாகக் கண்டெடுக்கப்பட்டார். அவரது உடல் மிகவும் அழுகிய நிலையில் இருந்தது. இதையடுத்து, உடற்கூறாய்வு முடிவடைந்த பின் அவரது உடல் குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டது. இந்த சம்பவத்திற்கு முன்பு, சுஜானா தனது முன்னாள் காதலரான ரவிக்குமார் என்பவருடன் அந்த அறையில் தங்கியிருந்ததாகச் சந்தேகிக்கப்படுகிறது.

சுஜானா உயிரிழந்த பிறகு ரவிக்குமார் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டதாகத் தகவல் கிடைத்துள்ளது. கடந்த காலங்களில் இருவரும் காதலித்து வந்த நிலையில், சில காரணங்களால் கடந்த ஆறு மாதங்களாக சுஜானா ரவிக்குமாரை விட்டு விலகி இருந்துள்ளார். தற்பொழுது சுஜானாவின் தந்தை அளித்த புகாரின் அடிப்படையில், ரவிக்குமார் மீது பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. விடுதியின் சிசிடிவி காட்சிகள் மற்றும் அலைபேசி அழைப்பு விவரங்களைச் சேகரித்து மியாப்பூர் போலீஸார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in