“ஒரே நேரத்தில் இருவருடன் கள்ளத்தொடர்பு..!”படுக்கையிலிருந்த கணவனை வீட்டிக்குள் வைத்துக்கொண்டு மனைவி செய்த கொடூரம்.. நெஞ்சை உலுக்கும் சம்பவம்..!! – cinefeeds
Connect with us

CRIME

“ஒரே நேரத்தில் இருவருடன் கள்ளத்தொடர்பு..!”படுக்கையிலிருந்த கணவனை வீட்டிக்குள் வைத்துக்கொண்டு மனைவி செய்த கொடூரம்.. நெஞ்சை உலுக்கும் சம்பவம்..!!

Published

on

சென்னை தாம்பரம் அடுத்த ஆலப்பாக்கம் பகுதியில், நோய்வாய்ப்பட்ட கணவனை வீட்டிலேயே வைத்துக்கொண்டு ஒரே நேரத்தில் இருவருடன் திருமணத்திற்கு மீறிய உறவில் இருந்த 45 வயது பெண், தனது முதல் கள்ளக்காதலனுடன் சேர்ந்து இரண்டாவது கள்ளக்காதலனை இரும்புக் கம்பியால் அடித்துக் கொலை செய்ய முயன்ற அதிர்ச்சிச் சம்பவம் அம்பலமாகியுள்ளது. விபத்தில் சிக்கி கணவர் படுக்கையிலிருந்த நிலையில், பூங்கொடி என்ற அந்தப் பெண்ணிற்கு முதலில் கார் ஓட்டுநர் தாமோதரன் என்பவருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. அதன் தொடர்ச்சியாக, கடந்த 9 மாதங்களுக்கு முன்பு வீட்டின் இரும்பு கேட்டினை பழுதுபார்க்க வந்த வெல்டர் ஜெய்சங்கர்என்பவருடனும் பூங்கொடிக்குத் தகாத உறவு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், கடந்த சில நாட்களாக ஜெய்சங்கர் கொடுத்த பாலியல் தொல்லைகளால் ஆத்திரமடைந்த பூங்கொடி, தனது முதல் கள்ளக்காதலன் தாமோதரனை வீட்டிற்கு வரவழைத்து ஜெய்சங்கரைத் தீர்த்துக்கட்ட சதித்திட்டம் தீட்டியுள்ளார்.

இருவரும் சேர்ந்து ஜெய்சங்கரின் தலையில் இரும்புக் கம்பியால் சரமாரியாகத் தாக்கியதில் அவர் மயங்கி விழுந்துள்ளார். பின்னர் கொலையை மறைப்பதற்காக, அவர் மாடியில் இருந்து தவறி விழுந்துவிட்டதாக அக்கம் பக்கத்தினரிடம் கூறி நாடகமாடியுள்ளனர். உயிருக்குப் போராடிய ஜெய்சங்கர் சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையின் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இச்சம்பவம் குறித்துப் பெருங்களத்தூர் பீர்க்கன்காரணை போலீசார் பூங்கொடியிடம் நடத்திய அதிரடி விசாரணையில் முன்னுக்குப் பின் முரணான பதில்களால் சந்தேகம் வலுத்து, இறுதியில் இக்கொலை முயற்சிச் சதி அம்பலமானது. தற்போது பூங்கொடி மற்றும் தாமோதரன் மீது கொலை முயற்சி வழக்குப் பதிவு செய்யப்பட்டு, இருவரையும் போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திச் சிறையில் அடைத்துள்ளனர்.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in