CRIME
“நெஞ்சை பதறுது..” சமையலறை சிலிண்டருக்குப் பின்னால்காத்திருந்த எமன்.. 37 வயது பெண்ணிற்கு நடந்த விபரீதம்.. திடுக்கிடும் பின்னணி..!!
கேரள மாநிலம் கொல்லம் மாவட்டம் கடக்கால் சாரிபரம்பை பகுதியைச் சேர்ந்த ஷாலினி என்ற இளம் பெண், சமையலறை கேஸ் சிலிண்டரில் பதுங்கியிருந்த நச்சுப்பாம்பு கடித்ததால் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்துள்ளார். அனீஷ் என்பவரது மனைவியான ஷாலினி, தனது வீட்டுச் சமையலறையில் வேலை செய்துகொண்டிருந்தபோது, சிலிண்டரின் பின்னால் பாம்பு பதுங்கியிருப்பதை அவர் கவனிக்கவில்லை எனத் தெரிகிறது. அப்போது எதிர்பாராதவிதமாகச் சிலிண்டரில் இருந்த பாம்பு அவரைத் தீண்டியுள்ளது; உடனடியாக அவர் அஞ்சல் பகுதியில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு முதலுதவி சிகிச்சை பெற்று வீடு திரும்பியுள்ளார்.
இருப்பினும், வீட்டிற்கு வந்த பின்னர் ஷாலினிக்கு மீண்டும் உடல்நிலை மோசமடைந்ததால், அவர் மற்றொரு தனியார் மருத்துவமனையிலும், பின்னர் மேல் சிகிச்சைக்காகத் திருவனந்தபுரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையிலும் அனுமதிக்கப்பட்டார். அங்கு தீவிரச் சிகிச்சை அளிக்கப்பட்டும் பலனின்றி அவர் பரிதாபமாக இறந்தார். முதன்முதலில் அனுமதிக்கப்பட்ட மருத்துவமனையில் முழுமையான சிகிச்சை பெறாமல் பாதியிலேயே வீடு திரும்பியதே இவரது மரணத்திற்குக் காரணமாக இருக்கலாம் எனச் சந்தேகிக்கப்படும் நிலையில், இச்சம்பவம் குறித்துப் போலீசார் வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
