CRIME
“அடப்பாவி நீயெல்லாம் மனுஷனா..?” LIC பணத்துக்கு ஆசைப்பட்டு கணவன் செய்த கொடூர காரியம்.. மனைவிக்கு நேர்ந்த விபரீதம்.. போலீசாரை உறையவைத்த சம்பவம்..!!
மத்தியப் பிரதேச மாநிலம் ஜபல்பூரில், தன் மனைவி கவிதா சௌத்ரி (30) என்பவரின் பெயரில் இருந்த ரூ. 25 லட்சம் எல்.ஐ.சி பாலிசி மற்றும் இதர காப்பீட்டுத் தொகைகளைப் பெறுவதற்காக, கணவன் பிரயாஸ் பாண்டே என்பவனே ஆட்களை வைத்து மனைவியைக் கொலை செய்துள்ள கொடூரச் சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. கடந்த செப்டம்பர் 4-ஆம் தேதி கவிதா ஸ்கூட்டியில் சென்றபோது, வாடகைக்கு எடுக்கப்பட்ட லோடிங் ஆட்டோவால் மோதப்பட்டு உயிரிழந்தார். ஆரம்பத்தில் இது சாதாரண சாலை விபத்து என கருதப்பட்ட நிலையில், காவல்துறையினரின் தீவிர விசாரணையில் இது திட்டமிட்ட கொலை என்பது தெரியவந்துள்ளது.
இந்தக் கொலைச் சம்பவத்திற்காக நீதிமன்றத்திற்கு வெளியே வைத்து சதித்திட்டம் தீட்டப்பட்டு, மூன்று பேருக்குக் கொலைக்கான கூலி கொடுக்கப்பட்டுள்ளது. குற்றவாளிகள் கவிதாவின் அடையாளத்திற்காக அவரது புகைப்படத்தைப் பெற்று, அவர் வரும் வழியில் பல மணி நேரம் காத்திருந்து இந்த விபத்தை ஏற்படுத்தியுள்ளனர். தற்போது இந்த வழக்கில் கொலைக்கு உடந்தையாக இருந்த விக்ரம் சௌத்ரி, ராம்ஜி சௌத்ரி மற்றும் தாராம் சௌத்ரி ஆகிய மூன்று பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். எனினும், இந்தச் சதியின் முக்கிய சூத்திரதாரியான கணவன் பிரயாஸ் பாண்டே மற்றும் அவரது உதவியாளர் மான்சிங் லோதி ஆகிய இருவரையும் போலீசார் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.
