LATEST NEWS
“ஓடிக்கொண்டிருந்த ரயிலில் திடீர் பயங்கரம்..!” ஏசி பெட்டிக்குள் இருந்து எட்டிப்பார்த்த மர்ம பாம்பு.. அலறியடித்த பயணிகள்.. காட்டுத்தீயாய் பரவும் வீடியோ..!!
கோண்டியா – பரௌனி எக்ஸ்பிரஸின் மூன்றாவது ஏசி பெட்டியில் ஒரு பிரம்மாண்டமான பாம்பு காணப்பட்ட சம்பவம், ரயிலில் பயணம் செய்த பயணிகளிடையே பெரும் பீதியையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. ஓடிக்கொண்டிருந்த ரயிலின் ஏசி பெட்டியில் உள்ள மேல் படுக்கையின் ஓரத்தில் இருந்த இரும்புத் துளைகளில் இருந்து இந்த நீளமான பாம்பு திடீரெனத் தோன்றி வெளியே வந்துள்ளது.
இதைக் கண்ட பயணிகள் அலறியடித்தபடி, இருக்கைகளை விட்டு உடனடியாகப் பாதுகாப்பான இடங்களுக்கு ஓடியுள்ளனர். பாம்பு ஏசி பெட்டிக்குள் நெளிந்து ஊர்ந்து செல்லும் இந்தத் திடுக்கிடும் காட்சிகள் அடங்கிய காணொளி சமூக வலைதளங்களில் வெளியாகி தற்போது காட்டுத்தீயாகப் பரவி வருகிறது.
