அடக்கொடுமையே.. போலீஸ பார்த்ததும் பயத்துல அலறி அடித்து ஓடிய டிரைவர்.. அடுத்து நடந்த பகீர் சம்பவம்..! மணல் கடத்தலை தடுக்கச் சென்ற சப்-இன்ஸ்பெக்டருக்கு நேர்ந்த சோகம்..!!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

அடக்கொடுமையே.. போலீஸ பார்த்ததும் பயத்துல அலறி அடித்து ஓடிய டிரைவர்.. அடுத்து நடந்த பகீர் சம்பவம்..! மணல் கடத்தலை தடுக்கச் சென்ற சப்-இன்ஸ்பெக்டருக்கு நேர்ந்த சோகம்..!!!

Published

on

தஞ்சாவூர் மாவட்டம், பாபநாசம் தாலுகா மெலட்டூர் கோடுகிழி கிராமத்தில் சட்டவிரோதமாக மணல் கடத்துவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இது குறித்த தகவலின் பேரில் மெலட்டூர் காவல் நிலைய சப் – இன்ஸ்பெக்டர் முத்துவேல் மற்றும் தலைமை காவலர் ராமர் இருவரும் இரு சக்கர வாகனத்தில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். கோடுகிழி கிராமத்தில் ரோந்து பணியில் ஈடுபட்டு கொண்டிருந்த போது எதிரே ஒரு டிராக்டர் வந்துள்ளது. சந்தேகத்தின் பேரில் அதை தடுத்து நிறுத்த முயற்சி செய்தனர்.

அப்போது அச்சத்தில் இருந்த டிராக்டர் ஓட்டுநர் நிறுத்தாமல் வண்டியில் இருந்து குதித்து தப்பி சென்று விட்டார். ஆனால் டிராக்டர் நிற்காமல் முன்னோக்கி சென்று, சப் – இன்ஸ்பெக்டர் முத்துவேல் மீது மோதியது. டிராக்டர் மோதியதில் சப்- இன்ஸ்பெக்டரின் தலை மற்றும் கால்களில் பலத்த காயம் ஏற்பட்டது.

Advertisement

இதனால் அந்த இடத்தில் கீழே விழுந்து வேதனையில் துடித்தார். இதனை பார்த்த தலைமைக் காவலர் ராமர், மெலட்டூர் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தார். உடனடியாக அங்கிருந்து வந்த சப்-இன்ஸ்பெக்டர் போதுமணி மற்றும் காவலர்கள் முத்துவேலை மீட்டு சிகிச்சைக்காக தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in