பகீர்..! ‘தாய்மாமன்’ திட்ட தங்க மோதிரம் தராததால் செவிலியர் குடும்பத்திற்கு மண்வெட்டி வெட்டு.. கும்பகோணத்தில் கொடூரம்..!!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

பகீர்..! ‘தாய்மாமன்’ திட்ட தங்க மோதிரம் தராததால் செவிலியர் குடும்பத்திற்கு மண்வெட்டி வெட்டு.. கும்பகோணத்தில் கொடூரம்..!!!

Published

on

தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் அருகே, அரசு வழங்கும் ‘தாய்மாமன்’ திட்டத்தின் கீழ் பிறந்த குழந்தைக்கு தங்க மோதிரம் வழங்காததால், கிராம சுகாதார செவிலியர் மற்றும் அவரது குடும்பத்தினர் மீது மண்வெட்டியால் கொலைவெறித் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. முழையூர் பகுதியில் பணியாற்றி வரும் அலமேலு என்ற செவிலியரே இந்தத் தாக்குதலுக்கு ஆளாகியுள்ளார். மதுபோதையில் வந்த மதன் என்ற நபர் இந்த வன்முறையில் ஈடுபட்டுள்ளார்.

குழந்தை பிறந்த தேதியின் முன்னுரிமை அடிப்படையிலேயே தங்க மோதிரம் வழங்கப்படும் என்று செவிலியர் அலமேலு விளக்கமளித்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த மதன், செவிலியருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டதோடு மட்டுமல்லாமல், மறைத்து வைத்திருந்த மண்வெட்டியை எடுத்து அலமேலு மற்றும் அவரது குடும்பத்தினரை கொடூரமாகத் தாக்கியுள்ளார்.

Advertisement

இந்தத் தாக்குதலில் காயமடைந்தவர்கள் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அரசு ஊழியர் பணி நிமித்தமாக தாக்கப்பட்ட இந்த அதிர்ச்சிச் சம்பவம் குறித்து, உள்ளூர் காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in