அடக் கொடுமையே..! நடைப்பயிற்சி சென்ற இடத்தில் அலறித் துடித்த 75 வயது மூதாட்டி.. நொடிப் பொழுதில் தங்கச் சங்கிலியைப் பறித்துச் சென்ற கொள்ளையர்கள்… நெஞ்சைப் பதறவைக்கும் திக் திக் நிமிடங்கள்..!! – cinefeeds
Connect with us

CRIME

அடக் கொடுமையே..! நடைப்பயிற்சி சென்ற இடத்தில் அலறித் துடித்த 75 வயது மூதாட்டி.. நொடிப் பொழுதில் தங்கச் சங்கிலியைப் பறித்துச் சென்ற கொள்ளையர்கள்… நெஞ்சைப் பதறவைக்கும் திக் திக் நிமிடங்கள்..!!

Published

on

செப்டம்பர் 28 அன்று அதிகாலை 5 மணி அளவில் எலஹங்கா நியூ டவுனில் 75 வயதான சன்னம்மா என்ற முதிய பெண்மணி தனியாக நடைப்பயிற்சி மேற்கொண்டிருந்தார். அப்போது மோட்டார் சைக்கிளில் வந்த அடையாளம் தெரியாத இரு நபர்கள் அவரைத் தொடர்ச்சியாகப் பின்தொடர்ந்து சென்றுள்ளனர்.

சன்னம்மாவின் அருகில் வந்த அந்த இரு நபர்களும் நொடிப் பொழுதில் அவரது கழுத்தில் அணிந்திருந்த 30 கிராம் எடையுள்ள தங்கச் சங்கிலியைப் பறித்துக் கொண்டு, தாங்கள் வந்த மோட்டார் சைக்கிளிலேயே அங்கிருந்து வேகமாகத் தப்பிச் சென்றுவிட்டனர்.

Advertisement

இச்சம்பவம் குறித்து சன்னம்மா அளித்த புகாரின் அடிப்படையில் எலஹங்கா நியூ டவுன் காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்துள்ளனர். மேலும், குற்றவாளிகளை அடையாளம் காணவும், அவர்கள் தப்பிச் சென்ற பாதையைக் கண்டறியவும் அப்பகுதியில் உள்ள சிசிடிவி கேமரா காட்சிகளைப் போலீஸார் தீவிரமாக ஆய்வு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in