பைக்கை எடுக்கும் முன் உஷார்..! இருக்கைக்கு அடியில் ஒளிந்திருந்த எமன்.. ஓடும் பைக்கிலேயே நடந்த பயங்கரம்… நடுங்கவைக்கும் சம்பவம்..!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

பைக்கை எடுக்கும் முன் உஷார்..! இருக்கைக்கு அடியில் ஒளிந்திருந்த எமன்.. ஓடும் பைக்கிலேயே நடந்த பயங்கரம்… நடுங்கவைக்கும் சம்பவம்..!!

Published

on

உத்தரப் பிரதேச மாநிலம் பரேலியில் ஓடும் பைக்கின் இருக்கைக்கு அடியில் ஒளிந்திருந்த விஷப் பாம்பு கடித்ததில் பாதுகாப்பு முகமை உரிமையாளர் ஒருவர் படுகாயமடைந்த அதிர்ச்சி சம்பவம் நடந்துள்ளது. சுபாஷ் நகரைச் சேர்ந்த 45 வயதான சூர்ய பிரகாஷ் பாடக் என்பவர், வெள்ளிக்கிழமை தனது பைக்கில் காளிபாடி கோயிலுக்குச் சென்று கொண்டிருந்த போது இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது.

பைக் சென்று கொண்டிருந்த போது, தொடைப் பகுதியில் கடுமையான வலியும் எரிச்சலும் ஏற்பட்டுள்ளது. அவர் நிலையை உணர்வதற்குள் இருக்கைக்கு அடியில் இருந்த பாம்பு அவரை மீண்டும் கடித்துள்ளது. விஷம் ஏறத் தொடங்கியதும் அவருக்கு மயக்கம் ஏற்பட்டபோதிலும், சாதுரியமாக பைக்கை வீதியின் ஓரமாக நிறுத்திவிட்டு அங்கிருந்த பாதசாரிகளிடம் உதவி கேட்டுள்ளார்.

Advertisement

உடனடியாக அவரை மீட்ட பொதுமக்கள் சிகிச்சைக்காக மாவட்ட அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். தொடர்ந்து பெய்து வரும் மழையின் காரணமாக பரேலியில் ஆகஸ்ட் 1 முதல் இதுவரை 125-க்கும் மேற்பட்ட பாம்பு கடி சம்பவங்கள் பதிவாகியுள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். தற்போது சூர்ய பிரகாஷுக்கு அவசர சிகிச்சைப் பிரிவில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in