LATEST NEWS
“என் நண்பனுக்கு இல்லைனா எனக்கும் வேணாம்…” சென்னை விமான நிலையத்தில் கெத்து காட்டிய CM விஜய்..! அதிகாரிகள் அதிர்ச்சி..!!!
தனது நண்பர் விஷ்ணு ரெட்டிக்கு அனுமதி மறுக்கப்பட்டதால், தமிழக முதல்வர் விஜய் சென்னை விமான நிலையத்தில் VIP நுழைவாயிலைத் தவிர்த்துச் சென்ற சம்பவம் தற்போது பெரும் பேசுபொருளாக மாறியுள்ளது. Z+ பிரிவு VVIP பாதுகாப்பு வளையத்தில் இருக்கும் முதல்வர் விஜய்க்கு சென்னை விமான நிலையத்தில் உள்ள 6-ஆம் எண் கேட் வழியே VIP நுழைவாயிலைப் பயன்படுத்த அதிகாரம் உண்டு.
இருப்பினும், அவருடன் வந்த முதல்வரின் ஆலோசகரும் நண்பருமான விஷ்ணு ரெட்டிக்கு விமான நிலைய அதிகாரிகள் VIP நுழைவாயில் வழியாகச் செல்ல அனுமதி மறுத்துள்ளனர். தனது நண்பருக்கு அனுமதி மறுக்கப்பட்டதை அறிந்த முதல்வர் விஜய், சிறப்புச் சலுகையை ஏற்க மறுத்து, மற்ற சாதாரண பயணிகளைப் போலப் பொது நுழைவாயில் வழியிலேயே விமான நிலையத்திற்குள் சென்றார்.
