LATEST NEWS
“என் கரியரையே அழிச்சுட்டாரு…” தோனி அப்படிப் பண்ணியிருப்பாரா..? உண்மையைப் போட்டு உடைத்த இர்ஃபான் பதான்..!!
இர்ஃபான் பதான் அளித்த வைரல் பேட்டி ஒன்றில், தோனி தனது சர்வதேச கிரிக்கெட் கரியரை அழித்துவிட்டார் என மறைமுகமாகக் குற்றம்சாட்டியுள்ளார். இலங்கைக்கு எதிராக நடைபெற்ற ஒரு போட்டியில், தான் 16 பந்துகளில் 33 ரன்கள் விளாசியதுடன் 1 விக்கெட்டும் வீழ்த்தி, அந்த போட்டியைத் தனி ஆளாக வெற்றிபெறச் செய்து கொடுத்ததாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
ஆனால், அந்தப் போட்டியில் ஆட்டநாயகன் விருது பெற்றபோதிலும், அதற்கு அடுத்த தொடரிலேயே அணியில் இருந்து நீக்கப்பட்டதாக அவர் ஆதங்கத்துடன் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அன்றைய இந்திய அணியின் பயிற்சியாளர் கேரி கிர்ஸ்டனிடம் தான் விளக்கம் கேட்டபோது, “சில விஷயங்கள் என் கட்டுப்பாட்டில் இல்லை” என்று அவர் பதிலளித்ததாகவும், இதன் பின்னணியில் தோனியின் தலையீடு இருந்திருக்கலாம் என்றும் இர்ஃபான் பதான் பேசியுள்ளது கிரிக்கெட் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
