CRIME
“இது என்ன கொடுமை.. குளிர்பானத்தில் கலந்த மரணம்..” பெத்த பிள்ளைகளுக்கு விஷம் கொடுத்துவிட்டு தந்தை எடுத்த கொடூர முடிவு.. திடுக்கிடவைக்கும் பின்னணி..!!
தெலங்கானா மற்றும் ஆந்திர எல்லைப் பகுதியில் நிலப்பிரச்சினை அல்லது குடும்பத் தகராறு காரணமாக விவசாயி ஒருவர் தனது இரு குழந்தைகளுக்கு குளிர்பானத்தில் பூச்சிக்கொல்லி மருந்து கொடுத்துவிட்டு, தானும் தற்கொலை செய்துகொண்ட கொடூரச் சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கம்மம் மாவட்டம் நெலகொண்டபள்ளி மண்டலம் அப்பலநரசிம்மாபுரம் கிராமத்தைச் சேர்ந்த விவசாயி புசுலூரி சீனிவாச ராவ் (38), தனக்குச் சொந்தமான மற்றும் குத்தகைக்கு எடுத்த சுமார் 30 ஏக்கர் நிலத்தில் விவசாயம் செய்து வந்தார். இவர் தனது மகள் லாஸ்யா மற்றும் மகன் நிகில் ஆகியோரை பைக்கில் அழைத்துக்கொண்டு, என்.டி.ஆர் மாவட்ட எல்லையிலுள்ள காண்ட்ராயி கிராமத்தில் உள்ள தனது குத்தகை நிலத்திற்குச் சென்றுள்ளார். அங்கு, குளிர்பானத்தில் பூச்சிக்கொல்லி மருந்தைக்கலந்து குழந்தைகளைக் குடிக்க வைத்ததுடன், தானும் அதைக் குடித்துள்ளார்.
நிலத்தில் மூவரும் உயிருக்குப் போராடிக் கொண்டிருப்பதைக்கண்ட உள்ளூர் மக்கள், அவர்களை மீட்டு உடனடியாக மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். ஆனால், சீனிவாச ராவ் வழியிலேயே பரிதாபமாக உயிரிழந்தார். மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி மகள் லாஸ்யாவும் உயிரிழந்தாள். உயிருக்குப் போராடும் மகன் நிகிலின் நிலைமை மிகவும் கவலைக்கிடமாக இருப்பதால், அவர் மேல் சிகிச்சைக்காக ஹைதராபாத்திற்கு மாற்றப்பட்டுள்ளார். சீனிவாச ராவுக்குப் பொருளாதார ரீதியாக எந்தவொரு பணப் பிரச்சினையும் இல்லாத சூழலில், அவர் ஏன் இத்தகைய கொடூர முடிவை எடுத்தார் என கிராம மக்கள் அதிர்ச்சியுடன் பேசி வருகின்றனர். கணவன்-மனைவி இடையே ஏற்பட்ட குடும்பத் தகராறு தான் இந்த விபரீதத்திற்கு காரணமா என்ற கோணத்தில் போலீசார் வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
