அய்யோ கொடுமையே… அந்த ஒரு நொடி தூக்க கலக்கம்… லாரி மீது மோதி நொறுங்கிய கார்…! துடிதுடித்து முடிந்த உயிர்.. அதிகாலையில் நேர்ந்த பெருஞ்சோகம்..!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

அய்யோ கொடுமையே… அந்த ஒரு நொடி தூக்க கலக்கம்… லாரி மீது மோதி நொறுங்கிய கார்…! துடிதுடித்து முடிந்த உயிர்.. அதிகாலையில் நேர்ந்த பெருஞ்சோகம்..!!

Published

on

ஆந்திர மாநிலம் சித்தூர் அருகே சாலையோரம் நிறுத்தப்பட்டிருந்த லாரி மீது கார் மோதிய பயங்கர விபத்தில், தமிழ்நாட்டைச் சேர்ந்த பெண் ஒருவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். மேலும், அதே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் பலத்த காயமடைந்துள்ளனர். தமிழ்நாட்டின் கிருஷ்ணகிரி மாவட்டத்தைச் சேர்ந்த ஒரே குடும்பத்தினர், ஆந்திராவில் உள்ள புகழ்பெற்ற திருப்பதி ஏழுமலையான் கோயிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்துவிட்டு, இன்று அதிகாலை கார் மூலம் தங்களது சொந்த ஊரான கிருஷ்ணகிரிக்கு திரும்பிக் கொண்டிருந்தனர்.

அவர்களின் கார் சித்தூர் தேசிய நெடுஞ்சாலை பகுதியில் வந்துகொண்டிருந்தபோது, எதிர்பாராதவிதமாக கட்டுப்பாட்டை இழந்து சாலையோரமாக நிறுத்தப்பட்டிருந்த லாரியின் பின்புறத்தில் அதிவேகமாக மோதியது. இந்த விபத்தின் தாக்கத்தால் காரின் முன்பகுதி முற்றிலும் நொறுங்கியது. இந்த கோர விபத்தில் காரில் பயணம் செய்த கிருஷ்ணகிரியைச் சேர்ந்த பெண் ஒருவர், உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே துடிதுடித்து உயிரிழந்தார். ஓட்டுநர் உட்பட காரில் இருந்த மேலும் 5 பேர் பலத்த காயமடைந்தனர்.

Advertisement

விபத்து குறித்து தகவல் அறிந்த உள்ளூர் பொதுமக்கள் மற்றும் சித்தூர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து, காயமடைந்தவர்களை மீட்டு சிகிச்சைக்காக அருகில் உள்ள அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. விபத்தில் பலியான பெண்ணின் உடல் பிரேத பரிசோதனைக்காக ஆஸ்பத்திரிக்கு அனுப்பப்பட்டது. அதிகாலை வேளையில் ஓட்டுநரின் தூக்க கலக்கம் அல்லது கவனக்குறைவு காரணமாக இந்த விபத்து நேரிட்டிருக்கலாம் என்ற கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in