LATEST NEWS
“போய் செத்துப் போ…” மருந்து வாங்க காசு கேட்ட மனைவி… கணவன் சொன்ன ஒரே வார்த்தை… கங்கையில் 14 மணி நேரம் நடந்த மரண போராட்டம்..!!
உத்தரப் பிரதேச மாநிலம் மிசாபூர் மாவட்டம், கட்சவா காவல் எல்லைக்குட்பட்ட பரைனி கிராமத்தைச் சேர்ந்தவர் சுனிதா சாஹ்னி (38). இவருக்கு சுமார் 18 ஆண்டுகளுக்கு முன்பு சூரியபலி என்பவருடன் திருமணமாகி, கணவர் குஜராத்தில் உள்ள ஜாம்நகரில் வேலை செய்து வருகிறார். சுனிதா தனது உடல்நலக்குறைவுக்காக மருந்து வாங்கக் கணவரிடம் தொலைபேசியில் பணம் கேட்டுள்ளார். ஆனால், கணவர் உடனே பணம் அனுப்பாமல் காலம் தாழ்த்தியதுடன், “”எனக்கு உன்னைப் பற்றிக் கவலையில்லை, போய் செத்துப் போ” என்று அவதூறாகப் பேசியுள்ளார். கணவரின் இந்த வார்த்தைகளால் மனமுடைந்த சுனிதா, செவ்வாய்க்கிழமை மாலை வீட்டை விட்டு வெளியேறி சாஸ்திரி பாலத்திலிருந்து கங்கை நதியில் குதித்துள்ளார்.
சுனிதா கங்கையில் குதித்த தகவலறிந்த காவல் துறையினர் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். இருப்பினும், கங்கை நதியில் நீரோட்டம் மிகவும் தீவிரமாக இருந்ததால், அவரைக் உடனடியாகக் கண்டுபிடிக்க முடியவில்லை. நதியின் பலத்த ஓட்டத்தில் அடித்துச் செல்லப்பட்ட அவர், விடிய விடிய நதியிலேயே மிதந்தபடி சுமார் 14 மணி நேரத்தில் 40 கிலோமீட்டர் தூரம் வரை அடித்துச் செல்லப்பட்டு சுனார் கட்டம் பகுதியை அடைந்தார்.
புதன்கிழமை காலை சுனார் கட்டம் அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்த மீனவர்கள், ஆற்றில் ஒரு பெண் மிதப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்து அவரை உடனடியாகப் பத்திரமாக மீட்டனர். பின்னர் இதுகுறித்து காவல் துறைக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டு, அவர் சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். அங்கு அளிக்கப்பட்ட சிகிச்சைக்குப் பின் அவரது உடல்நிலை சீரடைந்தது. சுனாரின் காவல் துறை அதிகாரி விஜயசங்கர் சிங், இச்சம்பவம் குறித்து சுனிதாவிடம் வாக்குமூலம் பதிவு செய்து, விசாரணைக்குப் பிறகு அவரைப் பெற்றோர் மற்றும் உறவினர்களிடம் ஒப்படைத்தார்.
