“என் தங்கை முக்கியம்…” ஓடையில் தத்தளித்த தங்கையைக் காப்பாற்றப் பாய்ந்த அண்ணன்.. இறுதியில் நேர்ந்த விபரீதம்.. நெஞ்சை உலுக்கும் சோக சம்பவம்..!! – cinefeeds
Connect with us

CRIME

“என் தங்கை முக்கியம்…” ஓடையில் தத்தளித்த தங்கையைக் காப்பாற்றப் பாய்ந்த அண்ணன்.. இறுதியில் நேர்ந்த விபரீதம்.. நெஞ்சை உலுக்கும் சோக சம்பவம்..!!

Published

on

தெலங்கானா மாநிலம் நிஜாமாபாத் மாவட்டம் நவிபேட் மண்டலத்தில் உள்ள ஜன்னபள்ளி கிராமத்தில், தற்செயலாக ஓடையில் விழுந்த தங்கையைக் காப்பாற்ற முயன்ற அண்ணனும், அவரோடு சேர்ந்து தங்கையும் நீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்த நெஞ்சை உலுக்கும் சோகச் சம்பவம் நடந்துள்ளது. ஜன்னபள்ளி பகுதியைச் சேர்ந்த கணேஷா என்ற வாலிபரும், அவரது தங்கை லாயாவும் அப்பகுதியில் உள்ள ஓர் ஓடையின் அருகே சென்றுள்ளனர். அப்போது எதிர்பாராதவிதமாக தங்கை லாயா நிலைதடுமாறி ஓடைக்குள் விழுந்து, தண்ணீரில் மூழ்கத் தொடங்கியுள்ளார்.

தன் கண் முன்னே தங்கை தண்ணீரில் தத்தளிப்பதைக் கண்டு பதறிய அண்ணன் கணேஷா, அவளைக் காப்பாற்ற வேண்டும் என்ற ஒரே நோக்கத்தில் சற்றும் யோசிக்காமல் ஓடைக்குள் குதித்துள்ளார். ஆனால், துரதிர்ஷ்டவசமாக நீரின் வேகம் அதிகமாக இருந்ததால் கணேஷாவாலும் வெளியே வர முடியாமல், தங்கை லாயாவுடன் சேர்ந்து அவரும் ஓடைத் தண்ணீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தார். இந்த விபத்து குறித்துத் தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார், இருவரின் உடல்களையும் கைப்பற்றி வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். ஒரே குடும்பத்தைச் சேர்ந்த அண்ணன், தங்கை இருவருமே ஓடையில் மூழ்கி உயிரிழந்த இந்தத் துயரச் சம்பவம் ஜன்னபள்ளி கிராம மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in