CRIME
“அம்மாவும் மாமாவும் சேர்ந்து பாட்டியை…” தூங்கி கொண்டிருந்த தாய்க்கு நேர்ந்த கொடூரம்… கள்ளகாதலனுக்காக பெற்ற மகளே செய்த வெறிச்செயல்.. 6 வயது மகன் சொன்ன பகீர் வாக்குமூலம்..!!
ஆந்திர மாநிலம் குண்டூர் மாவட்டம் பொன்னூரு கேபின் பேட்ட பகுதியில், கள்ளக்காதலனுடன் சேர்ந்து பெற்ற தாயைக் கொலை செய்துவிட்டு, மகனைத் தவிக்கவிட்டு ஓடிய பெண்ணின் கொடூரச் செயல் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஈவூரு லட்சுமி (48) என்ற பெண்ணின் மகளான புஷ்பலதா, கணவர் இறந்த பிறகு தனது மகனுடன் தாயின் வீட்டில் வசித்து வந்தார். அப்போது ராஜா என்ற நபருடன் ஏற்பட்ட கள்ளக்காதலை தாய் லட்சுமி கண்டித்ததால், தங்களுக்கு இடையூறாக இருந்த தாயைக் கொல்ல புஷ்பலதா தனது கள்ளக்காதலனுடன் சேர்ந்து திட்டம் தீட்டினார். அதன்படி, தாய் வீட்டில் தூங்கிக் கொண்டிருந்தபோது தலையணையால் முகத்தை அமுக்கி மூச்சுத்திணறடித்துக் கொடூரமாகக் கொலை செய்துள்ளார்.
தாயைக் கொலை செய்த பிறகு, வீட்டில் இருந்த பணம் மற்றும் நகைகளைக் கொள்ளையடித்துக் கொண்டு, தனது பெற்ற மகனைக் காப்பார் இன்றி தவிக்கவிட்டு கள்ளக்காதலனுடன் புஷ்பலதா தப்பியோடிவிட்டார். மறுநாள் காலையில், தனது அம்மாவும் மாமாவும் சேர்ந்து பாட்டியை எப்படிக் கொலை செய்தார்கள் என்று அந்தச் சிறுவன் விவரித்துக் கூறியபோதுதான் இந்த அதிர்ச்சி ஊட்டும் உண்மை வெளிச்சத்திற்கு வந்தது. இதுகுறித்து வழக்குப் பதிவு செய்துள்ள பொன்னூரு போலீசார், தப்பியோடிய கள்ளக்காதல் ஜோடியைத் தீவிரமாகத் தேடி வருகின்றனர். பெற்ற மகனின் சாட்சியத்தால் தாயின் கொலைக் குற்றம் அம்பலமான இந்தச் சம்பவம் அந்தப் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
