CRIME
“நான் உன்னை கல்யாணம் பண்ணிக்கிறேன்..” என ஆசை வார்த்தை கூறி பிரபல டான்சர் செய்த ‘அந்த’ கொடூரம்… இளம்பெண் பரபரப்பு புகார்..!!
பிரபல தொலைக்காட்சி நடன நிகழ்ச்சியான “தீ” ஷோவின் டான்சர் ராஜு, இளம்பெண் ஒருவருக்குத் திருமண வாக்குறுதி அளித்து ஏமாற்றிப் பாலியல் தொல்லை கொடுத்த புகாரின் கீழ் மியாப்பூர் காவல் துறையினரால் அதிரடியாகக் கைது செய்யப்பட்டுள்ளார். பாதிக்கப்பட்ட அந்த இளம்பெண் கடந்த செப்டம்பர் 9-ஆம் தேதி மியாப்பூர் காவல் நிலையத்தில் டான்சர் ராஜுவுக்கு எதிராக எழுத்துப்பூர்வமாகப் புகார் அளித்துள்ளார். அதில், தன்னைத் திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தைகள் கூறி நம்பவைத்து, அதன் பின்னர் தன்னை ராஜு பாலியல் ரீதியாகத் துன்புறுத்தியதாக அந்தப் பெண் மிகக் கடுமையான குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளார்.
இளம்பெண்ணின் புகாரைப் பெற்றுக்கொண்ட மியாப்பூர் போலீசார், டான்சர் ராஜு மீது பாலியல் வன்கொடுமை மற்றும் ஏமாற்றுதல் உள்ளிட்ட சட்டப்பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்து அவரை உடனடியாகக் கைது செய்தனர். பின்னர் அவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட நிலையில், வழக்கின் விவரங்களையும் ஆதாரங்களையும் ஆய்வு செய்த நீதிமன்றம், டான்சர் ராஜுவை நீதிமன்றக் காவலில் வைக்க அதிரடி உத்தர பிறப்பித்துள்ளது. சின்னத்திரை வட்டாரத்திலும் சமூக வலைத்தளங்களிலும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள இந்த விவகாரம் குறித்துப் போலீசார் தற்பொழுது மேல் விசாரணையைத் தீவிரப்படுத்தியுள்ளனர்.
