CRIME
“அவரை நான் அப்பாவியா நம்பினேன்.. ஆனா..?!” 17 வயது வெளிநாட்டு மாணவிக்கு முன்னாள் மேயர் செய்த மாபெரும் நரகக் கொடுமை.. நெஞ்சை பதறவைக்கும் பின்னணி..!!
அமெரிக்காவின் வடக்கு கலிபோர்னியாவில் உள்ள பிக்ஸ் நகரத்தின் 58 வயது முன்னாள் மேயர் ராபர்ட் பிரையன் பாசெட், தனது வீட்டில் தங்கியிருந்த வெளிநாட்டு 17 வயது பள்ளி மாணவியை மாதக்கணக்கில் பாலியல் வன்கொடுமை செய்த கொடூரக் குற்றத்திற்காக நான்கு ஆண்டுகள் மற்றும் நான்கு மாதங்கள் சிறை தண்டனை விதிக்கப்பட்டு சிறையிலடைக்கப்பட்டுள்ளார். பாதிக்கப்பட்ட அந்தப் பதின்ம வயதுப் பெண், தனது குடும்பத்தை விட்டு ஆயிரக்கணக்கான மைல்கள் தொலைவில் இருந்து கலிபோர்னியாவிற்குப் படிக்க வந்துள்ளார். கடந்த 2023 ஏப்ரல் முதல் நவம்பர் மாதம் வரை அந்த மேயரின் வீட்டில் ‘பேயிங் கெஸ்ட்’ போல தங்கியிருந்த சிறுமியின் பலவீனமான மற்றும் ஆதரவற்ற நிலையைத் தனக்குச் சாதகமாகப் பயன்படுத்திய முன்னாள் மேயர் ராபர்ட், அவளது நம்பிக்கையை அடியோடு சிதைத்துப் பலமுறை அசுரத்தனமாகப் பாலியல் ரீதியாகத் துன்புறுத்தியுள்ளார்.
இந்த அசாத்திய நம்பிக்கைத் துரோகம் குறித்துப் பாதிக்கப்பட்ட பெண், “அவரை நான் முழுமையாக நம்பினேன், ஆனால் அவர் எனக்குப் பெரும் துரோகம் செய்துவிட்டார்” என்று நீதிமன்றத்தில் கண்ணீர் மல்கத் தெரிவித்துள்ளார். 2022 முதல் டிசம்பர் 2024 வரை பிக்ஸ் நகரத்தின் மேயராகப் பதவி வகித்த ராபர்ட்டின் வீட்டில், காவல்துறையினர் அதிரடி சோதனை வாரண்ட் மூலம் சோதனை நடத்தி அவரைக் கைது செய்த பின்னரே இந்த விபரீத உண்மை உலகிற்கு அப்பட்டமாக வெளிவரத் தொடங்கியது. நீதிமன்றத்தில் அவர் மீதான குழந்தை பாலியல் வன்கொடுமை உள்ளிட்ட மூன்று கொடூரக் குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டதன் அடிப்படையில் இந்த அதிரடித் தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. மேலும், அவர் சிறையிலிருந்து விடுதலையான பிறகும் தொடர்ந்து 10 ஆண்டுகளுக்குப் பாலியல் குற்றவாளியாகவே (Sex Offender) பதிவு செய்யப்பட வேண்டும் என்றும் நீதிமன்றம் மரண ஆப்பு அடித்துள்ளது.
