LATEST NEWS
“யாரும் எந்திரிச்சி ஓடிடாதீங்க” – விஜய்யின் பேச்சை நீக்கச் சொன்ன ஓபிஎஸ்.. “அதெல்லாம் முடியாது” என சபாநாயகர் ஜேசிடி பிரபாகர் அதிரடி நிராகரிப்பு..!!
தமிழக சட்டப்பேரவையின் காவல்துறை மானியக்கோரிக்கை மீதான விவாதத்தின் போது, முதலமைச்சர் விஜய் பேசிய குறிப்பிட்ட வார்த்தையை அவைக்குறிப்பில் இருந்து நீக்கக் கோரி முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் விடுத்த கோரிக்கை நிராகரிக்கப்பட்டுள்ளது பேரவையில் இன்று உரையாற்றிய எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலினின் சட்டம் ஒழுங்கு குற்றச்சாட்டுகளுக்கு, வரும் திங்கள்கிழமை பதிலளிப்பதாக முதலமைச்சர் விஜய் தெரிவித்தார் . அப்போது அவர், “நான் திங்கள்கிழமை பதில் சொல்கிறேன், ஆனால் அதற்குள் யாரும் அவையை விட்டு எழுந்து ஓடிவிடக்கூடாது என பிராமிஸ் செய்ய வேண்டும்” என்று கூறிவிட்டுப் புறப்பட்டார் .
முதலமைச்சர் விஜய்யின் இந்த “யாரும் எந்திரிச்சி ஓடிடாதீங்க” என்ற பேச்சுக்கு அவையில் கடும் எதிர்ப்பு கிளம்பியது. இச்சூழலில், முதலமைச்சரின் அந்த வார்த்தையை சட்டமன்ற அவைக்குறிப்பில் இருந்து உடனடியாக நீக்க வேண்டும் என முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் சபாநாயகரிடம் வலியுறுத்தினார் . ஆனால், அவரின் இந்த கோரிக்கையை ஏற்க மறுத்த சபாநாயகர் ஜேசிடி பிரபாகர், “அதையெல்லாம் அவைக்குறிப்பில் இருந்து நீக்க முடியாது” என்று அதிரடியாகத் தெரிவித்துவிட்டார் . சபாநாயகரின் இந்த அதிரடி முடிவால் சட்டப்பேரவை கூட்டத்தொடரில் மேலும் பரபரப்பு அதிகரித்துள்ளது.
