இது என்னப்பா புதுக் கூத்தா இருக்கு..! மனைவி சானிட்டரி நாப்கின்ல… கணவன் குழந்தை டயப்பர்ல… சினிமா பட பாணியில் ரூ.1 கோடி தங்கக் கடத்தல்… ஆனா கிளைமேக்ஸ் சொதப்பல்… விமான நிலையத்தில் அதிகாரிகளின் சாதுரியத்தால் அம்பலமான பிளான்..!!! – cinefeeds
Connect with us

CRIME

இது என்னப்பா புதுக் கூத்தா இருக்கு..! மனைவி சானிட்டரி நாப்கின்ல… கணவன் குழந்தை டயப்பர்ல… சினிமா பட பாணியில் ரூ.1 கோடி தங்கக் கடத்தல்… ஆனா கிளைமேக்ஸ் சொதப்பல்… விமான நிலையத்தில் அதிகாரிகளின் சாதுரியத்தால் அம்பலமான பிளான்..!!!

Published

on

கேரள மாநிலம் மலப்புறம் மாவட்டம் பொன்னானியைச் சேர்ந்த நபர் ஒருவர், தனது ஆறு வயது, நான்கு வயது மற்றும் எட்டு மாதக் குழந்தைகளுடன் ஐக்கிய அரபு அமீரகத்தின் ராஸ் அல் கைமாவில் இருந்து கோழிக்கோடு விமான நிலையத்திற்கு வந்துள்ளார். அப்போது, அந்த பயணி தங்கக் கடத்தலில் ஈடுபடுவதாக அதிகாரிகளுக்கு ரகசியத் தகவல் கிடைத்தது. இதையடுத்து சந்தேகத்தின் பேரில் அந்த குடும்பத்தினரிடம் புலனாய்வுத் துறை அதிகாரிகள் தீவிர சோதனை நடத்தினர்.

அப்போது தந்தை தூக்கி வந்த எட்டு மாதக் குழந்தையை அதிகாரிகள் சோதனை செய்தபோது, அக்குழந்தையின் டயப்பருக்குள் மறைத்து வைக்கப்பட்டிருந்த சுமார் 1 கோடி ரூபாய் மதிப்பிலான தங்கம் கண்டறியப்பட்டது. இதையடுத்து தங்கக் கடத்தலில் ஈடுபட்ட தந்தையை புலனாய்வுத் துறை அதிகாரிகள் கைது செய்து நீதிமன்றக் காவலில் அடைத்தனர். முன்னதாக, இவரது மனைவி தான் அணிந்திருந்த சானிட்டரி நாப்கினில் சுமார் 1.7 கிலோ தங்கத்தை மறைத்து வைத்து கடத்த முயன்றபோது நெடும்பாசேரி விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Advertisement

கைக்குழந்தையுடன் வரும் குடும்பத்தினரிடம் சோதனைகள் குறைவாக இருக்கும் என்பதைப் பயன்படுத்தி, விமான நிலையச் சோதனையிலிருந்து தப்பிப்பதற்காக தந்தை இவ்வாறு செயல்பட்டதாக காவல் துறை அதிகாரிகள் தெரிவித்தனர். பறிமுதல் செய்யப்பட்ட தங்கம் தொடர்பாக கடத்தல் வலையமைப்பில் தொடர்புடைய மற்ற நபர்களை அடையாளம் காண விசாரணை நடைபெற்று வருவதோடு, சர்வதேச வழிகள் மூலமாக இந்தியாவிற்குள் கொண்டு வரப்படும் வெளிநாட்டுத் தங்கம் தொடர்பான புலனாய்வு நடவடிக்கைகளையும் அதிகாரிகள் தீவிரப்படுத்தியுள்ளனர்.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in