LATEST NEWS
“மறுத்தால் அடிப்பேன்..” 13 வயது சிறுமிக்கு 29 வயது நபருடன் கட்டாயத் திருமணம்.. சிரித்துக்கொண்டே மிரட்டும் கணவன்.. கண்ணீரில் உறைந்த சிறுமி.. இணையத்தில் வைரலாகும் ஷாக்கிங் வீடியோ..!!
இஸ்லாமிய ஷரியா சட்டத்தின் கீழ் 13 வயது சிறுமியான விஆம் என்பவரை, 29 வயதுடைய முகமது என்பவருக்குக் கட்டாயத் திருமணம் செய்து வைத்துள்ள கொடூரச் சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. “ஒரு பெண்ணால் இந்தத் திருமணத்திற்கு ‘இல்லை’ என்று சொல்ல முடியாது, அது எங்கள் கலாச்சாரத்திற்கு எதிரானது” என்று அந்தச் சிறுமி கண்ணீருடன் தனது குமுறலை வெளிப்படுத்தியுள்ளார். சிறுமிகளின் விருப்பத்திற்கு மாறாக, கலாச்சாரம் மற்றும் மதச் சட்டங்களின் பெயரால் நடத்தப்படும் இத்தகைய கட்டாயத் திருமணங்கள் பெண் குழந்தைகளின் எதிர்காலத்தையும் அவர்களது அடிப்படை உரிமைகளையும் முற்றிலுமாக சிதைப்பதாக சமூக ஆர்வலர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.
https://twitter.com/Shunyaa00/status/2095143304803565925/video/1
மறுபுறம், அந்தச் சிறுமியைத் திருமணம் செய்த முகமது, “அவள் மிகவும் இளமையானவள், நான் அவளை நேசிக்கிறேன். நான் என்ன சொன்னாலும் அவள் அதற்குக் கீழ்ப்படிய வேண்டும், அவள் ‘இல்லை’ என்று மறுத்தால் நான் அவளை அடிப்பேன்” என்று எவ்வித குற்ற உணர்ச்சியுமின்றி சிரித்துக்கொண்டே பேசியுள்ளார். கணவனின் வன்முறை மற்றும் ஆதிக்கத்திற்கு உட்பட்டு வாழக் கட்டாயப்படுத்தப்படும் பெண் குழந்தைகளின் அவல நிலையை இந்த வீடியோ அப்பட்டமாகத் தோலுரித்துக் காட்டியுள்ளது. இக்கொடூரமான ஆணாதிக்கச் சிந்தனை மற்றும் சிறுமிக்கு எதிரான அச்சுறுத்தல் மனித உரிமை மீறலாகப் பார்க்கப்பட்டு, உலகளவில் கடுமையான கண்டனக் குரல்களை எழுப்பி வருகிறது.
