“இப்போதே வந்துவிடுகிறேன்..” இரவு 8:30 மணிக்கு கடைக்கு சென்ற 13 வயது சிறுமி.. அடுத்து நடந்த விபரீதம்… நெஞ்சை உலுக்கும் பின்னணி..!! – cinefeeds
Connect with us

CRIME

“இப்போதே வந்துவிடுகிறேன்..” இரவு 8:30 மணிக்கு கடைக்கு சென்ற 13 வயது சிறுமி.. அடுத்து நடந்த விபரீதம்… நெஞ்சை உலுக்கும் பின்னணி..!!

Published

on

தெலங்கானா மாநிலம் ஹைதராபாத் காச்சிகுடா ரயில்வே குவாட்டர்ஸ் பகுதியில், கடைக்குச் சென்ற 13 வயது சிறுமி ஒருவர் திடீரென மாயமான சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பையும் அச்சத்தையும் ஏற்படுத்தியுள்ளது. மத்தியப் பிரதேச மாநிலம் பாலகாட் பகுதியைச் சேர்ந்த ராதிகா பகேஷ்வர் என்ற 13 வயது சிறுமி, கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்புதான் ஹைதராபாத்திற்கு வந்துள்ளார். அவர் காச்சிகுடா ரயில்வே குவாட்டர்ஸில் உள்ள தனது சகோதரி நந்த கிஷோர் என்பவரது வீட்டில் தங்கி வந்துள்ளார். இந்தச் சூழ்நிலையில், கடந்த அக்டோபர் 27-ஆம் தேதி இரவு சுமார் 8:30 மணி அளவில், அருகில் உள்ள கடைக்குச் சென்றுவிட்டு உடனே வருவதாகக் கூறிவிட்டுச் சென்றவர், அதன் பின்னர் வீடு திரும்பவில்லை.

சிறுமியைக் காணாமல் பதற்றமடைந்த குடும்பத்தினர் அக்கம் பக்கத்தினர் வீடுகளிலும், உறவினர்களின் இடங்களிலும் தீவிரமாகத் தேடிப் பார்த்துள்ளனர். எனினும், சிறுமி குறித்து எந்தவொரு தகவலும் கிடைக்காததால், இறுதியாகக் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். இச்சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்துள்ள காச்சிகுடா போலீசார், ரயில்வே குவாட்டர்ஸ் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் உள்ள சிசிடிவிகாட்சிகளை ஆய்வு செய்து, மாயமான சிறுமியைத் தேடும் பணிகளைத் தீவிரப்படுத்தியுள்ளனர்.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in