LATEST NEWS
BREAKING: அதிமுக முன்னாள் அமைச்சரின் மகன் படுகொலை… சொத்து தகராறில் அண்ணன் தம்பியை கொன்றதால் பரபரப்பு..!!
புதுக்கோட்டை மாவட்டம் வடகாடு பகுதியைச் சேர்ந்த மறைந்த முன்னாள் அதிமுக அமைச்சர் வெங்கடாசலத்தின் மகன்களுக்கு இடையே ஏற்பட்ட சொத்து தகராறில், தம்பி கொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. முன்னாள் அமைச்சர் வெங்கடாசலத்திற்கு இரண்டு மனைவிகள் உள்ள நிலையில், முதல் மனைவியின் மகன் ராஜபாண்டிக்கும், இரண்டாவது மனைவியின் மகன் ராஜராஜனுக்கும் இடையே நீண்ட நாட்களாகவே சொத்துத் தகராறு இருந்து வந்துள்ளது. இச்சூழலில் ஏற்பட்ட மோதலின் காரணமாக, அண்ணன் ராஜபாண்டி தனது தம்பி ராஜராஜனை கத்தியால் குத்தி கொலை செய்துள்ளார்.
இந்தச் சம்பவத்தை அடுத்து அண்ணன் ராஜபாண்டி அவ்விடத்திலிருந்து தலைமறைவாகிவிட்டார். தகவல் அறிந்து வந்த வடகாடு காவல்துறையினர், கொலை செய்யப்பட்ட ராஜராஜனின் உடலைக் கைப்பற்றிப் பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். மேலும், இச்சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்துள்ள காவல்துறையினர், தலைமறைவாகியுள்ள அண்ணன் ராஜபாண்டியைப் பிடிப்பதற்காகத் தனிப்படைகள் அமைத்துத் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.
