“அச்சோ இது என்ன கொடுமை..” விளையாட்டில் சண்டைபோட்டு சிறுவர்கள்.. தட்டிக்கேட்க போன தந்தைக்கு நேர்ந்த விபரீதம்.. நெஞ்சை பதறவைக்கும் சம்பவம்..!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

“அச்சோ இது என்ன கொடுமை..” விளையாட்டில் சண்டைபோட்டு சிறுவர்கள்.. தட்டிக்கேட்க போன தந்தைக்கு நேர்ந்த விபரீதம்.. நெஞ்சை பதறவைக்கும் சம்பவம்..!!

Published

on

மராட்டிய மாநிலம் நாக்பூரில் சிறுவர்களுக்கு இடையே விளையாடும்போது ஏற்பட்ட தகராறு, இறுதியில் ஒரு குடும்பத் தலைவரின் கொலையில் முடிந்துள்ள அதிர்ச்சிச் சம்பவம் அரங்கேறியுள்ளது. அங்குள்ள வதொடா பகுதியில் குழந்தைகள் விளையாடிக் கொண்டிருந்தபோது, அவர்களுக்குள் திடீரென சண்டை மற்றும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதனால் பாதிக்கப்பட்ட ஒரு சிறுவனின் தந்தை, மற்றொரு சிறுவனின் குடும்பத்தினரிடம் இதுகுறித்து நியாயம் கேட்பதற்காக அவர்களின் வீட்டிற்குச் சென்றுள்ளார். அப்போது இருதரப்பினருக்கும் இடையே ஏற்பட்ட வாக்குவாதம் எல்லை மீறி, பயங்கர மோதலாக உருவெடுத்தது.

இந்த மோதலின்போது, எதிர்த்தரப்பைச் சேர்ந்த மூன்று பேர் சேர்ந்து நியாயம் கேட்க வந்த நபரை இரும்பு கம்பியால் கொடூரமாகத் தாக்கியுள்ளனர். இதில் பலத்த காயமடைந்த அந்த நபர் பரிதாபமாக உயிரிழந்தார். உயிரிழந்தவர் ஷாபாஸ் ஷேக் என அடையாளம் காணப்பட்டுள்ளார். இந்த கொடூரக் கொலை சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்த வதொடா போலீசார், இரும்பு கம்பியால் தாக்கிய குற்றச்சாட்டின் கீழ் வாஹித் அன்சாரி, இம்ரான் அன்சாரி மற்றும் ருபினா அன்சாரி ஆகிய மூன்று பேரைக் கைது செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in