அடப்பாவிங்களா.? ஸ்மார்ட்போன், தங்கச் சங்கிலி வாங்க.. பெத்த பிள்ளையை ₹1.20 லட்சத்திற்கு விற்ற பெற்றோர்… நெஞ்சை உலுக்கிய அதிர்ச்சிச் சம்பவம்..!! – cinefeeds
Connect with us

CRIME

அடப்பாவிங்களா.? ஸ்மார்ட்போன், தங்கச் சங்கிலி வாங்க.. பெத்த பிள்ளையை ₹1.20 லட்சத்திற்கு விற்ற பெற்றோர்… நெஞ்சை உலுக்கிய அதிர்ச்சிச் சம்பவம்..!!

Published

on

மராட்டிய மாநிலம் மும்பை முகுந்த்வாடி பகுதியில், ஆடம்பர ஆசைக்காக தங்களின் பெற்ற குழந்தையையே விற்ற கொடூர சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. அங்கு வசிக்கும் ஒரு கூலித்தொழிலாளி தம்பதி, தங்களுக்குப் பிறந்த ஆண் குழந்தையை ₹1.20 லட்சத்திற்கு விற்றுள்ளனர். குடும்ப வறுமை காரணமாக இல்லாமல், விலை உயர்ந்த ஸ்மார்ட்போன் மற்றும் தங்கச் சங்கிலி வாங்குவதற்காகவே பெற்றோர் இந்த விபரீத செயலில் ஈடுபட்டதாக போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

குழந்தையை விற்றுக் கிடைத்த பணத்தில், அந்தப் பெற்றோர் ₹25,000 மதிப்பில் ஒரு புதிய ஸ்மார்ட்போனையும், ₹62,000 மதிப்பில் ஒரு தங்கச் சங்கிலியையும் வாங்கியுள்ளனர். இது குறித்துக் கிடைத்த ரகசியத் தகவலின் பேரில் அதிரடி நடவடிக்கை எடுத்த போலீசார், அவர்கள் வாங்கிய பொருட்களைப் பறிமுதல் செய்தனர். மேலும், முதற்கட்டமாக ஒரு பெண்ணுக்கு விற்கப்பட்ட அந்த ஆண் குழந்தை, அடுத்தடுத்து புரோக்கர்கள் கைமாறி, இறுதியாக ஹைதராபாத்தில் உள்ள ஒரு பெண்ணிடம் ₹3.50 லட்சத்திற்கு விற்கப்பட்டதும் கண்டுபிடிக்கப்பட்டது.

Advertisement

தற்போது அந்தப் பச்சிளம் குழந்தையைப் போலீசார் பத்திரமாக மீட்டு, குழந்தை நலக் குழுவிடம் ஒப்படைத்துள்ளனர். குழந்தை தற்போது அரசு காப்பகத்தில் பராமரிக்கப்பட்டு வருகிறது. இந்தச் சட்டவிரோதக் குழந்தை விற்பனையில் ஈடுபட்ட குழந்தையின் பெற்றோர், இடைத்தரகர்களாகச் செயல்பட்டவர்கள் மற்றும் குழந்தையை விலைக்கு வாங்கிய ஹைதராபாத் பெண் உட்பட மொத்தம் 7 பேரை முகுந்த்வாடி போலீசார் கைது செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in