“அடப்பாவி.. ஆன்லைன் சூதாட்ட வெறி..!” கடனுக்காக சிறுநீரகத்தை விற்ற வாலிபர்.. அப்புறம் நடந்த ட்விஸ்ட் தான் செம்ம ஷாக.. பரபரப்பு பின்னணி..!! – cinefeeds
Connect with us

CRIME

“அடப்பாவி.. ஆன்லைன் சூதாட்ட வெறி..!” கடனுக்காக சிறுநீரகத்தை விற்ற வாலிபர்.. அப்புறம் நடந்த ட்விஸ்ட் தான் செம்ம ஷாக.. பரபரப்பு பின்னணி..!!

Published

on

ஆந்திரப் பிரதேச மாநிலம் குண்டூர் மாவட்டத்தின் மங்களகிரியைச் சேர்ந்த வென்னா துர்கா தினேஷ் என்ற இளைஞர், ஆன்லைன் சூதாட்ட போதையால் பல லட்ச ரூபாயை இழந்து, கடனை அடைக்கத் தனது ஒரு சிறுநீரகத்தை விற்றதோடு, பின்னர் ஒரு திருட்டுக் கும்பலின் தலைவனாக மாறிய அதிர்ச்சி பின்னணி வெளிச்சத்திற்கு வந்துள்ளது. சூதாட்ட உலகில் ‘சிங்கிள் கிட்னி சாய்’ என்று அழைக்கப்படும் இவர், ஆன்லைன் பந்தயங்களில் தோற்ற பணத்திற்காக முதலில் வீட்டின் பொருட்களை விற்றுள்ளார். கடன் கொடுத்தவர்களின் அழுத்தம் அதிகரித்ததால் தனது சிறுநீரகத்தை விற்றும் கடன் தீராத நிலையில், குறுக்கு வழியில் பணம் சம்பாதிக்கத் திருடத் தொடங்கியுள்ளார்.

குண்டூர் மாவட்டத்தில் மட்டும் இவர் மீது 12 திருட்டு வழக்குகள் பதிவாகியுள்ள நிலையில், சிறையில் இருந்தபோது குஞ்சி ஏசுராஜா என்ற மற்றொரு திருடனுடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. சிறையிலிருந்து வெளியே வந்த இருவரும் இணைந்து பல வீடுகளில் கொள்ளையடித்துள்ளனர். சமீபத்தில் இப்பகுதியில் நடந்த ஒரு திருட்டு வழக்கு குறித்துப் போலீசார் விசாரித்து ஏசுராஜாவைக் கைது செய்தபோது, இந்த மொத்தக் கும்பலின் மாஸ்டர்மைண்டான ‘சிங்கிள் கிட்னி சாய்’ பற்றிய விபரங்கள் வெளிவந்தன. அதனைத் தொடர்ந்து போலீசார் சுற்றி வளைத்து தினேஷ் மற்றும் அவனது கூட்டாளிகளைக் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in