CRIME
“அடப்பாவமே.. காக்கிச் சட்டைக்கே இந்த நிலையா..?” துணிச்சலாக போலீசாரின் காதை அறுத்த ரவுடி.. விசாரணைக்கு போன இடத்தில் விபரீதம்.. பதறவைக்கும் சம்பவம்..!!
ராஜஸ்தானின் ஜெய்சல்மர் மாவட்டத்தில் உள்ள பொக்ரான் நகரில், குற்றவாளியைக் கைது செய்யச் சென்ற காவல்துறை குழுவினர் மீது நடத்தப்பட்ட கொடூரமான தாக்குதலில் காவலர் ஒருவரின் காது துண்டிக்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பவ்னிப்ரோல் பகுதியைச் சேர்ந்த ஜெய் பார்கவா என்பவர், தன்னை ரமேஷ் பிரஜாபதி என்ற நபர் தாக்கியதாக திங்கட்கிழமை காலையில் காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தார். இந்தப் புகாரின் அடிப்படையில் தலைமைக் காவலர் ரூபராம், காவலர் ஓட்டுநர் சதுராராம் மற்றும் மற்றொரு காவலர் ஆகியோர் அடங்கிய குழுவினர் விசாரணைக்காகக் குற்றம் சாட்டப்பட்ட ரமேஷ் பிரஜாபதியின் வீட்டிற்குச் சென்றுள்ளனர்.
காவல்துறையினர் அங்கு சென்றபோது, ரமேஷ் பிரஜாபதியுடன் அவரது உறவினர்களான நாராயணராம் மற்றும் ராதேஷியாம் ஆகியோரும் இருந்துள்ளனர். அவர்கள் திடீரென போலீசாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டு, அவர்களைக் கொடூரமாகத் தாக்கத் தொடங்கினர். அப்போது காவலர் சதுராராராமைக் கீழே தள்ளி நிலைைகுலையச் செய்துள்ளனர். தொடர்ந்து, அங்கிருந்த கட்டுமானப் பகுதியில் கிடந்த மின்சாரக் கட்டர் (Cutter Machine) ஒன்றை இயக்கி, அதைக் கொண்டு சதுராராமின் காதை ரமேஷ் பிரஜாபதி கொடூரமாக வெட்டியுள்ளார்.
இதைப்பார்த்து அதிர்ச்சியடைந்த மற்ற காவலர்கள் உடனடியாகச் செயல்பட்டு சதுராராரை மீட்டதுடன், பலத்த காயமடைந்த அவரைப் பொக்ரான் மருத்துவமனைக்கு அவசரமாகக் கொண்டு சென்றனர். இந்த வன்முறைச் சம்பவம் குறித்துத் தகவல் கிடைத்ததும், பொக்ரான் காவல் நிலைய ஆய்வாளர் மணீஷ் சோனி மற்றும் துணை காவல் கண்காணிப்பாளர் கைலாஷ் கன்வர் ரத்தோட் ஆகியோர் கூடுதல் போலீசாருடன் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து நிலைமையைக் கட்டுக்குள் கொண்டுவந்தனர். இக்கொடூரத் தாக்குதலில் ஈடுபட்ட முக்கியக் குற்றவாளி ஒருவரைப் போலீசார் கைது செய்துள்ள நிலையில், தப்பியோடிய மற்றவர்கள் மீது வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
