“என் அப்பாவை வச்சு காசு பார்க்காதீங்க..!” 30 வயது பெண்ணை கரம்பிடிக்கும் 75 வயது தாத்தா.. மகள் கொடுத்த அதிரடி விளக்கம்..நிச்சயதார்த்த வீடியோவின் பின்னணியில் இருக்கும் நிஜ உண்மை..!! – cinefeeds
Connect with us

CRIME

“என் அப்பாவை வச்சு காசு பார்க்காதீங்க..!” 30 வயது பெண்ணை கரம்பிடிக்கும் 75 வயது தாத்தா.. மகள் கொடுத்த அதிரடி விளக்கம்..நிச்சயதார்த்த வீடியோவின் பின்னணியில் இருக்கும் நிஜ உண்மை..!!

Published

on

உத்தரப் பிரதேசத்தின் அவுரையா பகுதியைச் சேர்ந்த 75 வயதான ராம் சுகர் மற்றும் 30 வயதான ரீனா ஆகியோரின் நிச்சயதார்த்த வீடியோ இணையத்தில் வெளியாகி, நாடு முழுவதும் பெரும் விவாதப் பொருளாக மாறியுள்ளது. சமூக ஊடகங்களில் லைக்குகளையும், பின்தொடர்பவர்களையும் அதிகரிப்பதற்காகப் பணம் கொடுத்து அரங்கேற்றப்பட்ட போலி நாடகம் இது என்று ஒரு தரப்பினர் குற்றம் சாட்டி வந்தனர். இந்த விவகாரம் காட்டுத்தீயாய் பரவி விமர்சனங்களைச் சந்தித்த நிலையில், முதியவர் ராம் சுகரின் மகளும் பிரபல வலைப்பதிவருமான ராதா இந்த வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைக்க நேரில் வந்து விளக்கம் அளித்துள்ளார்.

தன் தந்தைக்கும் ரீனாவுக்கும் இடையிலான உறவு முற்றிலும் உண்மையானது என்றும், அவர்களுக்கு மிக விரைவில் திருமணம் நடக்கவிருப்பது உறுதி என்றும் ராதா தெளிவுபடுத்தியுள்ளார். திருமணத் தேதி ஏற்கனவே நிர்ணயிக்கப்பட்டுவிட்டதாகவும், திருமணம் நடைபெறும் போது ஊடகப் பிரதிநிதிகள் அனைவரையும் அழைக்கப் போவதாகவும் அவர் கூறியுள்ளார். மேலும், தங்களது குடும்பத்திற்கு அவப்பெயரை ஏற்படுத்தும் வகையில் போலிச் செய்திகளைப் பரப்புபவர்கள் மீது சைபர் குற்றப் பிரிவு காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்போவதாக எச்சரித்துள்ள ராதா, இந்த வதந்திகளால் தன் தந்தையின் ஆரோக்கியத்திற்கு ஏதேனும் பாதிப்பு ஏற்பட்டால் அதற்குப் போலிச் செய்திகளைப் பரப்பியவர்களே பொறுப்பேற்க வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in