“நான் தான் கெத்து…” கையில் கத்தியுடன் இன்ஸ்டாவில் ரீல்ஸ் போட்ட பிரபல ரவுடி.. இறுதியில் காத்திருந்த ட்விஸ்ட்.. இணையத்தில் வைரலாகும் பகீர் வீடியோ..!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

“நான் தான் கெத்து…” கையில் கத்தியுடன் இன்ஸ்டாவில் ரீல்ஸ் போட்ட பிரபல ரவுடி.. இறுதியில் காத்திருந்த ட்விஸ்ட்.. இணையத்தில் வைரலாகும் பகீர் வீடியோ..!!

Published

on

கையில் பெரிய கத்தியுடன் ஜே.ஜே. நகர் பகுதிகளில் உலா வந்து, மக்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தும் வகையில் வீடியோக்களை சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு தலைமறைவாக இருந்த ரவுடி தௌசிஃப் கான் என்பவரை பெங்களூரு மத்திய குற்றப்பிரிவு காவல்துறையினர் கைது செய்துள்ளனர். இவர் மீது கொலை முயற்சி, தாக்குதல் உள்ளிட்ட பல்வேறு குற்ற வழக்குகள் நிலுவையில் உள்ள நிலையில், நீதிமன்ற விசாரணைகளுக்கு ஆஜராகாமல் தொடர்ச்சியாகத் தப்பித்து வந்துள்ளார்.

The Bengaluru Central Crime Branch (CCB) has arrested an alleged rowdy-sheeter who had been evading the police while allegedly roaming through J.J. Nagar brandishing a long machete and uploading videos of the act on social media.

The accused has been identified as Toushif Khan… pic.twitter.com/eo7G20YRvA— Hate Detector 🔍 (@HateDetectors) July 28, 2026

காவல்துறையின் பிடியில் இருந்து தப்பியோடிய நிலையிலும், தௌசிஃப் கான் ஜே.ஜே. நகர் பகுதிக்குள் நுழைந்து கத்தியுடன் நடனமாடும் வீடியோக்களைத் தனது செல்வாக்கைக் காட்டுவதற்காகவும், மக்களை மிரட்டுவதற்காகவும் சமூக வலைத்தளங்களில் பதிவேற்றி வந்துள்ளார். இவரது நடமாட்டத்தைக் தீவிரமாகக் கண்காணித்து வந்த குற்றப்பிரிவு காவல்துறையினர், இறுதியாக அவரைக் கைது செய்து நீதிமன்றக் காவலில் அடைத்துள்ளனர். இது தொடர்பான மேலதிக விசாரணைகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in