CRIME
அய்யோ நெஞ்சே வெடிச்சிடும்… மரண விளிம்பில் நின்ற மகன்… காப்பாற்றச் சென்ற தந்தை.. அலறிய தாய் செய்த விபரீதம்… காவ்டா மலையில் நடந்த கொடூரம் சம்பவம்..!!
மகனைக் காப்பாற்ற முயன்ற பெற்றோர் மலையிலிருந்து விழுந்து உயிரிழந்த நெஞ்சை உலுக்கும் கொடூரச் சம்பவம் மகாராஷ்டிர மாநிலம் சத்ரபதி சம்பாஜிநகர் மாவட்டத்திலுள்ள காவ்டா மலையில் நிகழ்ந்துள்ளது. தேவ்லாய் பகுதியைச் சேர்ந்த 18 வயது இளைஞர் ஒருவர், காலை 10 மணியளவில் காவ்டா மலைக் குன்றின் விளிம்பிற்குச் சென்று தற்கொலை செய்து கொள்வதாக மிரட்டியுள்ளார். இதனைப் பார்த்து அதிர்ச்சியடைந்த அவனது தாய், தந்தை, கிராம மக்கள் மற்றும் காவல்துறையினர் அந்த இளைஞனை மீட்கத் தொடர்ந்து 3 மணி நேரம் போராடினர். பெற்றோரைக் கருத்தில் கொண்டு இந்த விபரீத முடிவை எடுக்க வேண்டாம் எனப் பலமுறை கெஞ்சியும், அந்த இளைஞன் தொடர்ந்து குன்றின் விளிம்பிலேயே நின்றுகொண்டு மிரட்டல் விடுத்து வந்தான்.
https://www.instagram.com/reel/DcTMsKuIFZ-/?utm_source=ig_embed&ig_rid=A0TMHIueLMqmHw2vPDJkSBy
ஆரம்பத்தில் கீழே இருந்து மகனிடம் கெஞ்சிக் கொண்டிருந்த தந்தை, நிலைமை மோசமாவதைக் கண்டு இறுதிக்கட்டத்தில் குன்றின் மீது ஏறிச் சென்று மகனைப் பின்னால் இருந்து இழுத்துக் காப்பாற்ற முயன்றார். மதியம் 1 மணியளவில் தந்தை மகனைப் பிடிக்க முயன்ற போது, எதிர்பாராதவிதமாக இருவரும் நிலைதடுமாறி மலையிலிருந்து கீழே விழுந்தனர். தன் கணவனும் மகனும் கண் முன்னே விழுவதைக் கண்டு கடும் பதற்றமடைந்த தாயும் சில விநாடிகளில் மலையிலிருந்து கீழே விழுந்து, ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவரும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். தற்கொலை முயற்சியைத் தடுக்கத் திரண்டிருந்த கிராம மக்கள் மற்றும் காவல்துறையினர் முன்னிலையிலேயே இந்த விபரீதம் நடந்தேறியது ஒட்டுமொத்தப் பகுதியையும் பேரதிர்ச்சியிலும் சோகத்திலும் ஆழ்த்தியுள்ளது.
