CRIME
“சாமியாராக மாறிய திருடன்..” 40 வருடங்களாக போலீசுக்கு அல்வா கொடுத்த ‘பாகல் பாபா’.. காட்டிக்கொடுத்த சோசியல் மீடியா.. பரபரப்பு பின்னணி..!!
கான்பூரில் நடந்த திருட்டு வழக்கில் ஜாமீன் பெற்று கடந்த 40 ஆண்டுகளாகத் தலைமறைவாக இருந்த ராம்பிரகாஷ் என்ற குற்றவாளியைச் சமூக ஊடகமான பேஸ்புக் உதவியுடன் கான்பூர் போலீசார் பரேலி ஆசிரமத்தில் வைத்து அதிரடியாகக் கைது செய்துள்ளனர். கடந்த 1986-ஆம் ஆண்டு கான்னோஜ் பகுதியைச் சேர்ந்த ராம்பிரகாஷை ஒரு திருட்டு வழக்கில் ஃபசல்கஞ்ச் போலீசார் சிறையில் அடைத்தனர். பின்னர் ஜாமீனில் வெளிவந்த அவர், நீதிமன்ற விசாரணைகளுக்கு ஆஜராகாமல் தப்பியோடி பரேலிக்குச் சென்றுள்ளார். அங்கு தனது அடையாளத்தை முற்றிலும் மறைத்து ஒரு சாது போல வேடமிட்டு ‘பாகல் பாபா’ என்ற பெயரில் ஓர் ஆசிரமத்தையே அமைத்து வாழ்ந்து வந்துள்ளார்.
கடந்த 40 ஆண்டுகளாக நீதிமன்றம் வாரண்ட் பிறப்பித்தும் அவர் ஆஜராகாத நிலையில், இந்த வழக்கைக் தீவிரமாக விசாரிக்குமாறு மத்திய கான்பூர் டிசிபி-க்கு நீதிமன்றம் உத்தரவிட்டது. இதையடுத்து கான்பூர் போலீசார் தீவிரக் கண்காணிப்பு மற்றும் சமூக ஊடகத் தேடுதலில் ஈடுபட்டபோது, ‘பாகல் பாபா’ என்ற பெயரில் இருந்த அவரது பேஸ்புக் கணக்கு போலீசாரிடம் சிக்கியது. இதன் அடிப்படையில் 2026 அக்டோபர் 5-ஆம் தேதியான இன்று, பரேலியில் உள்ள ஆசிரமத்திற்குச் சென்ற போலீசார் அவரை அதிரடியாகக் கைது செய்து மீண்டும் சிறையில் அடைத்தனர்.
