LATEST NEWS
அய்யோ கொடுமை..! புடவை வாங்கிய சில நிமிடங்களில் சோகம்… வீட்டின் சுவரை உடைத்துக்கொண்டு புகுந்த சொகுசு ஜீப்… நொடியில் பறிபோன உயிர்..!!
கான்பூர் நகரைச் சேர்ந்தவர் சந்தோஷ் சிங் சவுகான் (வயது 55). தீபாவளியை முன்னிட்டு, தனது மனைவிக்கு புடவை வாங்குவதற்காக அவர் ஸ்கூட்டரில் சென்று கொண்டிருந்தார். அப்போது எதிரே சொகுசு ரக ஜீப் ஒன்றில் வந்த இளம்பெண், எதிர்பாராதவிதமாக அவர் மீது மோதி விபத்தை ஏற்படுத்தினார்.
விபத்துடன் நிற்காமல் அந்த ஜீப், பேராசிரியர் கைலாஷ் சவுகான் என்பவரின் வீட்டின் வளாக சுவர் மற்றும் ஜி.எஸ்.டி. கண்காணிப்பாளர் அனிதா மகாதேவனின் தோட்டத்திற்குள் புகுந்து நின்றது. விபத்தை ஏற்படுத்திய ஜீப்பில் இருந்த 2 பெண்கள் மற்றும் ஒரு ஆண், அந்த பகுதிக்கு வந்த மற்றொரு சொகுசு காரில் ஏறி அங்கிருந்து தப்பியோடினர்.
இந்தச் சம்பவம் நடந்த இடத்திலிருந்து வெறும் 500 மீட்டர் தொலைவில்தான் சந்தோஷ் சிங்கின் வீடு உள்ளது. புடவை வாங்கிவிட்டு அவர் வீட்டுக்குத் திரும்புவதற்குள் இந்த கோர விபத்து நடந்துள்ளது. இதற்கிடையே, அந்த இளம்பெண் ஜீப் ஓட்டுவதற்கான பயிற்சியைப் பெற்று வந்துள்ளார் என முதற்கட்ட தகவலل்கள் தெரிவிக்கின்றன; இதுதொடர்பாக போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
