“அச்சச்சோ.. போலீஸ் நிலையத்திற்குள் கொழுந்துவிட்டு எரிந்த தீ..” எஸ்.ஐயின் அராஜகத்தால் ஹோட்டல் உரிமையாளர் எடுத்த விபரீத முடிவு.. வைரலாகும் ஷாக்கிங் வீடியோ..!! – cinefeeds
Connect with us

CRIME

“அச்சச்சோ.. போலீஸ் நிலையத்திற்குள் கொழுந்துவிட்டு எரிந்த தீ..” எஸ்.ஐயின் அராஜகத்தால் ஹோட்டல் உரிமையாளர் எடுத்த விபரீத முடிவு.. வைரலாகும் ஷாக்கிங் வீடியோ..!!

Published

on

தெலங்கானா மாநிலம் நிசாமாபாத் மாவட்டம் பீம்கல் காவல் நிலையத்திற்குள், சுதாகர் என்ற ஹோட்டல் உரிமையாளர் காவல்துறையினரின் சித்திரவதை தாளாமல் தன் மீது பெட்ரோல் ஊற்றி தீக்குளித்த அதிர்ச்சிச் சம்பவம் அப்பகுதியில் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. பீம்கல் நகரில் ஹோட்டல் நடத்தி வரும் சுதாகரிடம், இரவு 10 மணிக்கு மேல் வெளியிலுள்ள மேஜைகளை அகற்றுமாறு போலீசார் கூறியுள்ளனர். இனிமேல் அப்படிச் செய்ய மாட்டேன் என்று சுதாகர் உறுதியளித்த நிலையிலும், பீம்கல் காவல் உதவி ஆய்வாளர் திருப்பதி அவர் மீது வழக்குப் பதிவு செய்துள்ளார். இன்று நீதிமன்றத்திற்குச் செல்ல வேண்டும் எனக் கூறி போலீசார் அவரை காவல் நிலையத்திற்கு வரவழைத்ததால், கடுமையான மன உளைச்சலுக்கு ஆளான சுதாகர் காவல் நிலைய வளாகத்திலேயே இத்தகைய விபரீத முடிவை எடுத்துள்ளார்.

சுதாகரின் இந்த நிலைக்குக் காவல்துறையினரின் தொடர் அச்சுறுத்தல்களும், அராஜகங்களுமே காரணம் என்று அவரது குடும்பத்தினர் குற்றம் சாட்டியுள்ளனர். தீ விபத்தில் படுகாயமடைந்த சுதாகரின் உடல்நிலை மிகவும் கவலைக்கிடமாக இருந்ததால், அவர் முதலுதவிக்குப் பின் உடனடியாக ஆர்மூர் அரசு மருத்துவமனைக்குத் தீவிர சிகிச்சைக்காக மாற்றப்பட்டுள்ளார். காவல் நிலையத்திற்குள்ளேயே இந்தத் தற்கொலை முயற்சி அரங்கேறியுள்ளதால், சம்பந்தப்பட்ட காவல் உதவி ஆய்வாளர் திருப்பதி மற்றும் அதிகாரிகள் மீது விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்கக் கோரி சுதாகரின் உறவினர்களும், உள்ளூர் வணிகர்களும் காவல் நிலையத்தை முற்றுகையிட்டுப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in