“மனிதநேயமே இல்லாத கொடூரம்..!” கழுத்தில் நாய் சங்கிலி கட்டி.. தலித் இளைஞரை துடிக்க துடிக்க தாக்கிய ஆதிக்க சாதி கும்பல்.. வைரலாகும் ஷாக்கிங் வீடியோ..!! – cinefeeds
Connect with us

CRIME

“மனிதநேயமே இல்லாத கொடூரம்..!” கழுத்தில் நாய் சங்கிலி கட்டி.. தலித் இளைஞரை துடிக்க துடிக்க தாக்கிய ஆதிக்க சாதி கும்பல்.. வைரலாகும் ஷாக்கிங் வீடியோ..!!

Published

on

உத்தரப் பிரதேச மாநிலம் கான்பூர் தேஹாத் மாவட்டத்தில், பழைய பகையின் காரணமாகத் தலித் இளைஞர் ஒருவரின் கழுத்தில் நாய் சங்கிலியைக்கட்டி, தடிகளாலும் கம்புகளாலும் அடித்தே கொடூரமாகக் கொலை செய்த அதிர்ச்சிச் சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது ஷிவ்லி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட ஜுராவர்பூர் கிராமத்தில் இந்த மனிதநேயமற்ற கொடூரம் அரங்கேறியுள்ளது. அப்பகுதியைச் சேர்ந்த ஆதிக்க சாதி ஆண்கள் மற்றும் பெண்கள் என ஒரு கும்பலே திரண்டு வந்து, அந்த இளைஞரை ரத்த வெள்ளத்தில் சரியும் வரை இரக்கமில்லாமல் மிகக் கொடூரமாகத் தாக்கியுள்ளனர்.

ஆதிக்க சாதியினரின் இந்த வெறித்தனமான தாக்குதலால் அந்த இளைஞர் கடுமையான வலியுடனும் வேதனையுடனும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இக்கொடூரச் சம்பவம் தொடர்பாக உயிரிழந்த இளைஞரின் சகோதரி அளித்த புகாரின் அடிப்படையில், இக்கொலையில் நேரடியாகத் தொடர்புடைய 6 பேர் மீது ஷிவ்லி காவல் நிலைய போலீசார் கொலை வழக்குப் பதிவு செய்துள்ளனர்’ தற்பொழுது தப்பியோடிய குற்றவாளிகளைப் பிடிக்கத் தனிப்படைகள் அமைக்கப்பட்டுத் தீவிரத் தேடுதல் வேட்டை நடத்தப்பட்டு வரும் நிலையில், இச்சம்பவத்தால் ஜுராவர்பூர் கிராமத்தில் பெரும் பதற்றம் நிலவி வருகிறது

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in