“அன்னைக்கி நாக்கை துறுத்திகிட்டு கேப்டன் சிங்கம் மாதிரி சீறுனாரு” 20 வருஷத்துக்கு முன்னாடி அங்கீகாரம் தந்திருந்தா தமிழ்நாடு எங்கேயோ போயிருக்கும்… விஜய பிரபாகரன் ஆவேசம்..!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

“அன்னைக்கி நாக்கை துறுத்திகிட்டு கேப்டன் சிங்கம் மாதிரி சீறுனாரு” 20 வருஷத்துக்கு முன்னாடி அங்கீகாரம் தந்திருந்தா தமிழ்நாடு எங்கேயோ போயிருக்கும்… விஜய பிரபாகரன் ஆவேசம்..!!

Published

on

தேமுதிக நிறுவனர் மறைந்த கேப்டன் விஜயகாந்தின் மகனும், கட்சியின் முக்கிய நிர்வாகியுமான விஜய பிரபாகரன், அண்மையில் நெட்டிசன்கள் மற்றும் ‘Gen Z’ தலைமுறையினரின் விமர்சனங்களுக்குப் பதிலடி கொடுக்கும் வகையில் கடுமையான கேள்விகளை எழுப்பியுள்ளார். தமிழக சட்டமன்றத்தில் தனது தந்தை விஜயகாந்த் சிங்கம் போல நாக்கை துருத்திக்கொண்டு ஆவேசமாகப் பேசியதைச் சுட்டிக்காட்டிய அவர், மக்கள் அன்று அவரது ஆவேசத்திற்குப் பின்னால் இருந்த நியாயத்தைப் பார்க்கத் தவறிவிட்டதாகக் வருத்தத்துடன் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், 20 வருடங்களுக்கு முன்பே தேமுதிகவிற்குத் தமிழக மக்கள் சரியான அங்கீகாரத்தைக் கொடுத்திருந்தால், தமிழ்நாடு இந்நேரம் அனைத்துத் துறைகளிலும் 20 ஆண்டுகள் முன்னோக்கிச் சென்று, மிகப்பெரிய வளர்ச்சியை அடைந்திருக்கும் என்று அவர் தனது ஆதங்கத்தைப் பதிவு செய்துள்ளார். அரசியல் மற்றும் சினிமா என்பது மிகவும் சிறிய துறைகள் என்றும்; ஒருவர் விரும்பினால் நடிகராகவோ, வழக்கறிஞராகவோ அல்லது வேறு எந்தத் துறைக்கு வேண்டுமானாலும் எளிதாகச் சென்றுவிட முடியும் என்றும் அவர் ஒப்பிட்டுக் பேசினார்.

Advertisement

தொடர்ந்து பேசிய அவர், பல வருடங்கள் கஷ்டப்பட்டுப் படித்துப் பெறும் “மருத்துவர்” என்ற தகுதி மட்டுமே ஒருவரது வாழ்நாள் முழுமைக்குமான நிரந்தர அடையாளம் மற்றும் வாழ்க்கையாக இருக்க முடியும் என்பதைச் சுட்டிக்காட்டினார். இந்த யதார்த்த உண்மைகளைப் பற்றித் தான் பேசினால், இன்றைய ‘Gen Z’ இளைஞர்கள் உடனே சமூக வலைத்தளங்களில் தன்னை நோக்கி அடுத்தடுத்துக் கேள்விகளை எழுப்புவது ஏன் என்றும் அவர் ஆவேசமாகத் தனது சரமாரி கேள்விகளை முன்வைத்துள்ளார்.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in