LATEST NEWS
1, 2 அல்ல… தொடர்ந்து 14 முறை தோல்வி..! 15-வது முறை நடந்த அந்த ‘மாஸ்’ மிராக்கிள்.. உலகையே திரும்பி பார்க்க வைத்த 24 வயது இளைஞன் சாதனை..!!
படங்களைப் பார்த்து பிள்ளைகள் கெட்டுப் போவார்கள்’ என்ற பொதுவான கருத்தை உடைத்தெறிந்து, ஒரு சினிமா தன் வாழ்க்கையையே மாற்றும் என்பதை நிரூபித்துள்ளார் பிஹாரைச் சேர்ந்த கிஷு சிங். தனது 9-ம் வயதில், இந்திய ராணுவத்தின் வீரத்தைப் போற்றும் ‘பார்டர்’ திரைப்படத்தைப் பார்த்தபோதே, எதிர்காலத்தில் தானும் ஒரு ராணுவ அதிகாரியாக வேண்டும் என்ற உன்னத லட்சியத்தை அவர் மனதில் விதைத்துக் கொண்டார். திரைப்படங்கள் வெறும் பொழுதுபோக்கு மட்டுமல்ல, அவை சரியான பாதையில் வழிநடத்தினால் ஒரு இளைஞனின் வாழ்க்கையையே மாற்றி அமைக்கும் உந்துசக்தியாக மாறும் என்பதற்கு கிஷு சிங்கின் சிறுவயது கனவே ஒரு மிகச்சிறந்த உதாரணம் ஆகும்.
ஆனால், அவரது லட்சியப் பயணம் அவ்வளவு எளிதானதாக இருக்கவில்லை. படிப்பை முடித்த பிறகு, ராணுவத்தில் சேருவதற்காக NDA, CDS, AFCAT, Navy என தொடர்ந்து பல்வேறு போட்டித் தேர்வுகளை எழுதினார். அடுத்தடுத்து 14 முறை தோல்விகளைச் சந்தித்த போதிலும், அவர் தனது லட்சியத்திலிருந்து பின்வாங்கவில்லை. மனம் தளராமல், கடுமையான உழைப்புடனும் விடாமுயற்சியுடனும் தனது 24-வது வயதில் 15-வது முயற்சியாக CDS தேர்வில் வெற்றி பெற்றார். இன்று இந்திய ராணுவத்தில் ‘லெப்டினன்ட்’ ஆகப் பொறுப்பேற்று, 9 வயதில் கண்ட தன் கனவை நனவாக்கியுள்ள கிஷு சிங்கின் கதை, தோல்விகளால் முடங்கிப்போகும் பல இளைஞர்களுக்கு ஒரு உத்வேகம் தரும் பாடம்.
