“தூயசக்தி ரீல் அறுந்து தொங்கிடுச்சு… நாடு சிரிக்கும் 4 மாத ஆட்சி..” முதல்வர் விஜய்யை வச்சு செய்த மு.க.ஸ்டாலின்..!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

“தூயசக்தி ரீல் அறுந்து தொங்கிடுச்சு… நாடு சிரிக்கும் 4 மாத ஆட்சி..” முதல்வர் விஜய்யை வச்சு செய்த மு.க.ஸ்டாலின்..!!

Published

on

சி.எம் சார் நாடு சிரிக்கும் நான்கு மாதங்கள் இந்த நான்கு கேள்விகளுக்குப் பதிலுண்டா? என்று திமுக தலைவரும் முன்னாள் முதல்வருமான மு.க.ஸ்டாலின் கேள்வியெழுப்பியுள்ளார். இது குறித்து அவர் தனது சமூகவலைதள பதிவில் குறிப்பிட்டுள்ளதாவது: பெண்களைப் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கியோரைச் சட்டமன்ற உறுப்பினர்களாகவும் மாவட்டச் செயலாளர்களாகவும் வைத்துக்கொண்டு முதலமைச்சர் பெண் பாதுகாவலர் போல வேடம் போடலாமா?

அறிவிக்கப்படாத மின்வெட்டில் இருந்து, இனி தினமும் அறிவித்துவிட்டு 8 மணிநேரம் மின்வெட்டு என்பதை நோக்கித் தமிழ்நாடு நகரவுள்ளதாக வரும் செய்திகள் உங்கள் செவிகளை எட்டவில்லையா? அசையாத மரமொன்று விழுந்தது கீழே என்ற கதையாக, இடைத்தேர்தல் தோல்வியைத் தவிர்க்க நீங்கள் மணிக்கணக்கில் தெருவலம் போவது போதாமல், டிபன் கேரியரில் பணமும் போகிறதாமே?

Advertisement

ஒரு தெருவுக்கு இவ்வளவு என வாக்குகள் விலைபேசப்படுவதாக உங்கள் ஆட்சி அமைய ஆதரவு தெரிவித்த கட்சிகளே குற்றம்சாட்டுவதற்குப் பதில் என்ன? இத்தோடு, குதிரைவேக குதிரை பேரத்துக்கு முற்றுப்புள்ளி வைக்கப்படுமா? அல்லது, இனியும் TVK Horse Trading-இன் அடுத்த Season தொடருமா? தூயசக்தி எனத் தம்பட்டம் அடித்த உங்களது ரீல் இப்படி நான்கே மாதங்களில் அறுந்து தொங்கிவிட்டதே என்று தெரிவித்துள்ளார்.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in