LATEST NEWS
அய்யோ கொடுமையே..! 10 வருஷ காத்திருப்பு… கர்ப்பப்பையை அகற்றியும் காப்பாற்ற முடியல… குழந்தையைப் பெற்றெடுத்த கையோடு தாயின் உயிர் பிரிந்த கொடூரம்… நெஞ்சை உலுக்கும் பகீர் பின்னணி..!!
தெலங்கானா மாநிலம் விக்காராபாத் மாவட்டம் தாண்டூர் மண்டலத்தைச் சேர்ந்த கௌடி லட்சுமி (36) என்ற பெண், குழந்தை பாக்கியத்திற்காக பல ஆண்டுகள் காத்திருந்தார். இறுதியில் கம்மத்தில் உள்ள பிளீஃப் மருத்துவமனையில் சேர்ந்த அவருக்குக் குழந்தை பிறந்த நிலையில், அவர் பரிதாபமாக உயிரிழந்தார். குழந்தைப் பேறுக்காக ஐ.யு.ஐ மற்றும் ஐ.வி.எஃப் சிகிச்சைகளுக்காக ரூ.10 லட்சமும், பிரசவத்திற்காக ரூ.3 லட்சமும் என மொத்தம் ரூ.13 லட்சம் வரை குடும்பத்தினர் செலவு செய்துள்ளனர்.
பிரசவத்திற்குப் பிறகு லட்சுமிக்கு ஏற்பட்ட கடும் ரத்தப்போக்கு காரணமாக இரண்டு நாட்களில் 20 பாக்கெட் ரத்தம் செலுத்தப்பட்டது. நிலைமை மேலும் மோசமடைந்ததால், அவரை மேல்சிகிச்சைக்காக ஹைதராபாத்திற்கு மாற்றக் கோரியும் மருத்துவமனை நிர்வாகம் அதற்கு ஒத்துழைக்கவில்லை என குடும்பத்தினர் குற்றம் சாட்டுகின்றனர். இறுதியில் பெண்ணின் கர்ப்பப்பையை அகற்றியும் அவரது உயிரைக் காப்பாற்ற முடியாமல் போனது.
மருத்துவர்கள் ரோஹித், விஜய் மற்றும் ஸ்ருதி ஆகியோரின் அலட்சியமே லட்சுமியின் மரணத்திற்கு காரணம் எனக் கூறி அவரது குடும்பத்தினர் கம்மம் ஒன் டவுன் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். நீண்ட போராட்டத்திற்குப் பின் பிறந்த பிஞ்சு குழந்தை, தன் தாயின் முகத்தைக் கூட அறியாமல் தவிக்கும் இந்தச் சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
