LATEST NEWS
“எங்க உயிர் போனாலும் பரவாயில்லை..” ஆழமான கால்வாயில் பாய்ந்த பொலேரோ கார்.. உயிரைப் பணையம் வைத்து 7 பேரை காப்பாற்றிய நிஜ ஹீரோக்கள்.. வைரல் வீடியோ..!!
பள்ளிச் சிறுவர்கள் 6 பேர் மற்றும் ஓட்டுநர் உட்பட 7 பேருடன் சென்ற பொலேரோ வாகனம் ஒன்று, குறுகிய பாலம் அருகே திடீரெனக் கட்டுப்பாட்டை இழந்து ஆழமான கால்வாயில் பாய்ந்து கவிழ்ந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
வாகனம் நீரில் மூழ்கத் தொடங்கியதைக் கண்டு அதிர்ச்சியடைந்த அப்பகுதி கிராம மக்களும் மீனவர்களும் சற்றும் தாமதிக்காமல் உடனடியாகச் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து தண்ணீரில் குதித்தனர். தங்கள் உயிரைப் பொருட்படுத்தாமல் சாமர்த்தியமாகச் செயல்பட்டு, காரின் உள்ளே சிக்கியிருந்த 6 பள்ளிச் சிறுவர்களையும் ஓட்டுநரையும் பத்திரமாக உயிருடன் மீட்டு வெளியே கொண்டு வந்தனர்.
சமயத்தில் சாதுரியமாகச் செயல்பட்டு 7 பேரின் உயிரைக் காப்பாற்றிய மீனவர்களுக்கும் கிராம மக்களுக்கும் சமூக வலைதளங்களில் பாராட்டுகள் குவிந்து வருகின்றன. இச்சம்பவம் தொடர்பான நெஞ்சைப் பதற வைக்கும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
