CINEMA
விபத்து இல்ல… பக்காவா பிளான் போட்டு பண்ணியக் கொலை.! உதவி இயக்குநர் சரண்ராஜ் மரணத்தில் வெளியான திடுக்கிடும் உண்மை..!!
நடிகரும், இயக்குநர் வெற்றிமாறனிடம் உதவி இயக்குநராக பணியாற்றியவருமான சரண்ராஜ் மரண வழக்கில் தற்போது பெரும் திருப்பம் ஏற்பட்டுள்ளது. துணை நடிகரான பழனியப்பன் மது அருந்திவிட்டு, சரண்ராஜின் பைக் மீது திட்டமிட்டுத் தனது காரால் மோதியது அங்கிருந்த CCTV கேமரா காட்சிகளின் மூலம் அம்பலமாகியுள்ளது. சரண்ராஜ் தான் கொடுத்த கடனைத் திரும்பக் கேட்டதன் காரணமாகவே, அவர் திட்டமிட்டுக் கொலை செய்யப்பட்டது காவல் துறையின் விசாரணையில் தெரியவந்துள்ளது.
2023-ஆம் ஆண்டு நடைபெற்ற இந்த அதிர்ச்சி சம்பவத்தின் வழக்கை விசாரித்த காவல் ஆய்வாளர் அகிலாவும் இவ்வழக்கில் வசமாகச் சிக்கியுள்ளார். கடனுக்காக நடைபெற்ற இந்தக் கொலையை, சாதாரணச் சாலை விபத்தாக மாற்றி மறைக்க முயன்ற பின்னணியில், ஆய்வாளர் அகிலாவின் நடவடிக்கைகளும் தற்போது வெளிச்சத்திற்கு வந்துள்ளதால் இவ்வழக்கு மேலும் தீவிரமடைந்துள்ளது.
