LATEST NEWS
“உண்மையா லவ் பண்ணியிருந்தா புரிஞ்சிருக்கும்..!” ரூ.20 நோட்டில் இருந்த ‘25340’.. காதலி கொடுத்த க்ளூ… காதலன் கோட்டை விட்ட காதல்.. இணையத்தை உலுக்கும் சம்பவம்..!!
திருமணம் நிச்சயம் செய்யப்பட்ட இளம்பெண் ஒருவர், தனது காதலனுக்காக ரூ.20 நோட்டில் ‘25340’ என்ற ரகசியக் குறியீட்டை எழுதி அனுப்பிய விசித்திரமான மற்றும் உணர்ச்சிப்பூர்வமான கதை சமூக வலைத்தளங்களில் பலரது கவனத்தையும் ஈர்த்துள்ளது. அந்தப் பெண்ணின் திருமண ஏற்பாடுகள் தீவிரமாக நடந்து கொண்டிருந்த சூழலில், தனது காதலனின் அன்பைச் சோதிப்பதற்காக இந்த வினோதமான வழியைக் கையாண்டுள்ளார். ஆனால், துரதிர்ஷ்டவசமாக அவளது காதலனால் அந்த எண்களுக்குப் பின்னால் இருந்த உண்மையான அர்த்தத்தைக் கடைசி வரை புரிந்துகொள்ள முடியாமல் போயுள்ளது. சமீபத்தில் தற்செயலாக அந்த ரூ.20 நோட்டைப் பார்த்த அவளது தோழிகள், இந்த ரகசியக் குறியீடு குறித்துக் கேட்டபோது, “அவன் என் மீது உண்மையான அன்பு வைத்திருந்தால், இந்த எண்களின் அர்த்தம் அவனுக்குக் கண்டிப்பாகப் புரிந்திருக்கும்” என்று அந்தப் பெண் வேதனையுடன் பதிலளித்துள்ளார்.
அதன்பின்னர், அந்த இளம்பெண் ‘25340’ என்ற ரகசியக் குறியீட்டின் உண்மையான மற்றும் ஆழமான அர்த்தத்தை வெளிப்படுத்தியபோது அவளது தோழிகள் அனைவரும் அதிர்ச்சியில் வாயடைத்துப் போயினர். 25340 – இரண்டு மனங்கள், ஐந்து நிமிடப் பிரிவு கூட தாங்காமல், மூன்று முடிச்சுகளுடன், நான்கு சுவற்றுக்குள், பூஜ்யமாகிவிட்ட வாழ்க்கை என்றவாறு தங்களது காதல் நினைவுகளை உள்ளடக்கிய ஒரு ரகசிய வார்த்தையாகவோ அது இருக்கலாம் எனப் பலரும் இணையத்தில் விவாதித்து வருகின்றனர். காதலன் அதைத் தேடிக் கண்டுபிடிக்கத் தவறியதால், மனமுடைந்த அந்தப் பெண் பெற்றோரின் விருப்பப்படி வேறு ஒருவரைத் திருமணம் செய்துகொள்ளச் சம்மதித்துள்ளார்.
