அடக்கொடுமையே.. குடும்பத் தகராறில் அரசு மருத்துவர் எடுத்த விபரீத முடிவு.. நெஞ்சை உலுக்கும் பின்னணி..!! – cinefeeds
Connect with us

CRIME

அடக்கொடுமையே.. குடும்பத் தகராறில் அரசு மருத்துவர் எடுத்த விபரீத முடிவு.. நெஞ்சை உலுக்கும் பின்னணி..!!

Published

on

உத்தரப் பிரதேச மாநிலம் கான்பூரின் கித்வாய் நகர் நிரலாநகர் பகுதியில், அரசு மருத்துவரான சந்தீப் சிங் தற்கொலை செய்து கொண்டதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. குடும்பத் தகராறு காரணமாக அவர் இந்த முடிவை எடுத்துள்ளதாகக் கூறப்படுகிறது. தற்கொலை செய்து கொண்ட சந்தீப் சிங் மற்றும் அவரது மனைவி ஆகிய இருவருமே அரசு மருத்துவர்கள் ஆவர். இந்த தம்பதியினர் தங்களது குடும்பத்தை விட்டுப் பிரிந்து, நிரலாநகரில் உள்ள ஒரு வாடகை குடியிருப்பில் தனியாக வசித்து வந்துள்ளனர்.

இறந்த சந்தீப் சிங்கின் மனைவி கான்பூர் தேஹாத் பகுதியில் அரசு மருத்துவராகப் பணியாற்றி வருகிறார். தம்பதியிடையே ஏற்பட்ட கருத்து வேறுபாட்டைத் தொடர்ந்து இச்சம்பவம் நிகழ்ந்துள்ளதாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. இச்சம்பவம் குறித்துத் தகவல் அறிந்த போலீசார், உடலைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைத்துள்ளதோடு, இது குறித்துத் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in