CRIME
“அடப்பாவிகளா..” கேஸ் சிலிண்டரை வெட்டி உள்ளே மறைத்து வைக்கப்பட்டிருந்த ‘அந்த’ பொருள்… போலீசாருக்கு காத்திருந்த அதிர்ச்சி.. வைரலாகும் வீடியோ…!!
மதுவிலக்கு அமலில் உள்ள பீகார் மாநிலத்தில், சமையல் எரிவாயு சிலிண்டர்களுக்குள் நூதன முறையில் மறைத்து விற்க முயன்ற பெருமளவிலான சட்டவிரோத மதுபானப் பொட்டலங்களைக் காவல்துறையினர் அதிரடியாகப் பறிமுதல் செய்துள்ளனர். பீகாரின் கடுமையான மதுபானத் தடையை மீறி, அண்டை மாநிலங்களில் இருந்து மதுபானங்களைக் கடத்தி வந்து அதிக விலைக்கு விற்கும் சட்டவிரோத வர்த்தகத்தில் கடத்தல்காரர்கள் ஈடுபட்டு வருகின்றனர். இதற்காக அவர்கள் காலியான எல்பிஜி சிலிண்டர்களின் அடிப்பகுதியை ரகசியமாக வெட்டி, அதன் உட்பகுதியில் மதுபானப் பொட்டலங்களை அடுக்கிக் கடத்தும் புதிய உத்தியைக் கையாண்டுள்ளது சோதனையின் போது அம்பலமாகியுள்ளது.
போலீசாருக்குக் கிடைத்த ரகசியத் தகவலின் அடிப்படையில் நடத்தப்பட்ட இந்த அதிரடி சோதனையில், கடத்தலுக்குப் பயன்படுத்தப்பட்ட சிலிண்டர்கள் மற்றும் கடத்தல் வாகனங்களைப் பறிமுதல் செய்த போலீசார், இதில் தொடர்புடைய நபர்களைக் கைது செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். பீகாரில் ஏற்கனவே பால் கேன்கள், கார்களின் ரகசிய அறைகள் மற்றும் காலண்டர்களுக்குள் மதுபானம் கடத்தப்பட்ட சம்பவங்கள் வெளிச்சத்திற்கு வந்த நிலையில், தற்போது ஆபத்தான எரிவாயு சிலிண்டர்களைக் கடத்தலுக்குப் பயன்படுத்தியிருப்பது பாதுகாப்பு குறித்த பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதனால் எல்லையோரப் பகுதிகளில் கண்காணிப்பை மேலும் தீவிரப்படுத்த அரசு உத்தரவிட்டுள்ளது.
